சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் செய்த தளபதி விஜய்.. வறுத்தெடுத்த பிரபல தயாரிப்பாளர்

விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் சமீபத்தில் நடைபெற்றது.

இதனிடையே சமீபகாலமாக, தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் எடுக்கப்படுவதாகவும் முக்கியமாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் இங்குள்ள தமிழ் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக பலரும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் கே ராஜன் சமீபத்தில் பேசிய பேட்டியில், அஜித்திடம் அவரது திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த சொன்னபோது அவர் சரி என்று ஒப்புக் கொண்டார். அதேபோல ரஜினிகாந்தும் அவர் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்துகிறார்.

ஆனால் நடிகர் விஜய்யின் திரைப்படங்களின் படப்பிடிப்பு அதிகளவு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது இது எல்லாம் சரியானதல்ல என்று குற்றம்சாட்டினார். மேலும் சென்னையில் உள்ள ஈ.வி.பியில் பல செட்டுகள் அமைத்து படப்பிடிப்புகளை நடத்தலாம், அவ்வளவு பெரிய இடம் இங்கே இருக்கும்போது, அதையெல்லாம் மறுத்துவிட்டு நடிகர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்வதால் இங்குள்ள தமிழ் தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் உள்ளனர் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

மேலும் தயாரிப்பாளர் கே ராஜன், தமிழர்கள் மீது அக்கறை இல்லாமல், தமிழ்மொழி மீது கூட பற்று இல்லாமல் இருக்கும் நடிகர்கள் சிலர் அவர்களின் திரைப்படம் மட்டும் தமிழ் மொழியில் நடிக்க வேண்டும், அதனை நம் தமிழர்கள் திரையரங்குகளில் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து பார்க்க வேண்டும் என்று எண்ணுவது தவறானது என்றும் சாடினார்.

மேலும் பேசிய அவர் ஒரு படத்தின் படப்பிடிப்பை 80 நாட்களில் முடித்துவிடலாம் ஆனால் எதற்காக 175 நாட்களுக்கு மேல் கால்ஷீட் வாங்கி நடிகர்களை இயக்குனர்கள் நடிக்க வைக்கிறார்கள் ஏன் என்று தெரியவில்லை ஆனால் இதன் விளைவு முழுக்க முழுக்க தயாரிப்பாளர்களுக்கு என்றும் ஆவேசத்துடன் கே ராஜன் தெரிவித்தார்.