தளபதி விஜய் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை டாக்டர் கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து அடுத்த வாரமே சென்னையில் நடத்த இருந்த படப்பிடிப்பு தற்போது தள்ளிச் சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புகளுக்கு பிளான் செய்து கொண்டிருக்கும்போதே விஜய்யின் தளபதி 66 படத்தைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும், அந்த படம் தளபதி 66 எனவும் கூறுகின்றன.
இதற்கிடையில் விஜய்யின் மகன் சஞ்சய் விஜய்யை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக ஏற்கனவே பலமுறை செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் அந்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் காதை கடிக்கிறது.
இவை கேள்விப்பட்ட விஜய் தன் மகனிடம், அப்படியே நான் வாய்ப்பு கொடுத்தாலும் படப்பிடிப்பு தளங்களில் முன்னணி நடிகரின் மகன் என்ற எந்த ஒரு சலுகையும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் சொல்வதைக் கேட்டு நேரத்திற்கு படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து பெயரை காப்பாற்ற வேண்டும் எனவும் அறிவுரை செய்ததாக விஜய் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.
