2 தரப்பும் திருந்தியதால் அஜித் விஜய் ஹேப்பி.. தளபதி, ஏகே மனதை கவர்ந்த சமரச சம்பவங்கள்

குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆனதிலிருந்து இப்பொழுது வரை நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. அது மட்டும் இன்றி விஜய் ரசிகர்களும் இந்த படத்தை நன்றாக இருக்கிறது என்று கொண்டாடி வருகிறார்கள். இப்படி ஒரு பண்பு இரு தரப்பினர்களிடமும் வளர்ந்து வருவது பாராட்டும்படி இருக்கிறது.

ஒரு காலத்தில் அஜித், விஜய் இருவருள் யாருக்காவது ஒருவருக்கு படம் ரிலீஸ் ஆகிவிட்டால், சமூக வலைதளத்தில் ஆரம்பித்து எல்லா பக்கமும் இவர்களது ரசிகர்கள் மாறி மாறி மோதிக் கொள்வார்கள். சமீப காலமாக இந்த மோதல்கள் குறைந்து வருகிறது, இதற்கு காரணமாக சில விஷயங்கள் பார்க்கப்படுகிறது.

TVK கட்சி தொடங்கியதில் இருந்து விஜய் ரசிகர்கள் தொண்டர்களாக மாறி ஒரு பாதையை தேர்ந்தெடுத்து உள்ளனர். விஜய் டீசன்ட் அரசியல் என்று மேடைக்கு மேடை பேசி வருவது இவர்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரையில் அஜித், விஜய் இருவரது முகத்தையும் பாதி பாதி வைத்து கட்டவுட் வைத்துள்ளனர்.

ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் தொண்டர்களாக மாறிவிட்டார்கள். மறுபக்கம் அஜித் ரசிகர்கள் ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் அஜித்தின் கட்டவுட்டுக்கு லிட்டர் கணக்கில் பாலாபிஷேகம் செய்வார்கள். இதனை பால் பண்ணையில் இருந்து எதிர்த்து வந்தார்கள்.

இப்பொழுது அப்படி பாலை வீணாக்காமல் ஆயிரக்கணக்கான பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி மாலையாக கோர்த்து கொண்டாடிய பின் அதனை வயதான பெரியவர்களுக்கு,ம் முடியாதவர்களுக்கும் கொடுத்து வேற லெவலில் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இவர்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தால் கோடம்பாக்கம் ஹேப்பி மூடில் இருக்கிறது.