கார்ப்பரேட்டை கடவுள் போல் நம்பும் விஜய், அஜித்.. வளர்த்து விட்டவர்களை கைவிட்ட பரிதாபம்

சமீபகாலமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கிறது. இதனால் பல வருடங்களாக முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட தற்போது படம் தயாரிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் படிப்படியாக முன்னேறி இன்று ஒரு பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் தான் விஜய் மற்றும் அஜீத் இருவரும். அவர்கள் இருவரையும் தமிழ் தயாரிப்பாளர்கள்தான் இந்த அளவிற்கு சினிமாவில் வளர்ந்து விட்டார்கள்.

ஆனால் இப்பொழுது அவர்கள் இருவரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அதிக படம் பண்ணுகின்றனர். மேலும் ஹிந்தி, தெலுங்கு போன்ற தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே அவர்கள் வாய்ப்பு கொடுக்கின்றனர். அந்த வகையில் அஜீத் கடந்த சில வருடங்களாக இந்தி தயாரிப்பாளர் போனி கபூருக்கு படம் நடித்துக் கொடுக்கிறார்.

அதேபோன்று நடிகர் விஜய்யும் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் தளபதி 66 படத்தை தெலுங்கு தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கிறார். இதற்குக் காரணம் அவர்களுக்கு பல கோடி சம்பளத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுப்பதுதான் என்று கூறப்படுகிறது.

முன்பெல்லாம் சினிமாவில் இது போன்று தன்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் முன்னணி நடிகர்கள் பலரும் அவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வந்தனர். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்திருக்கிறார்.

அதேபோன்றுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த ராம நாராயணன் அவர்கள் கார்ப்பரேட் நிறுவனம் இங்கே வந்து படம் பண்ணினால் இங்கே உள்ள தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்து தான் பண்ண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அந்த நடைமுறையை அப்போது இருந்தவர்களும் பின்பற்றி வந்தனர். ஆனால் இப்போது இருக்கும் தலைமுறைகள் அதை பாலோ பண்ணுவதில்லை. இதனால்தான் தற்போது தமிழ் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கை ஓங்கியே இருக்கிறது.