ஐம்பதை தாண்டியும் இந்திய அளவில் சாதனை படைக்கும் விஜய், அஜித்.. முதல் முறையாக ஒன்றாக கொண்டாடும் ஃபேன்ஸ்

தமிழ் சினிமாவை இப்போது கட்டிப்போட்டு வைத்துள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித். இந்த இரு நடிகர்களுக்கும் தான் தற்போது அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களது படம் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஆர்ப்பரிக்கின்றனர். இவர்கள் இருவரும் இப்போது 50 படங்களை தாண்டி நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அளவில் விஜய் மற்றும் அஜித் இப்போது சாதனை படைத்துள்ளனர். அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இந்த இரு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read : 26 வருடங்களில் அஜித்தை தூக்கி விட்ட யுவனின் ஏழு படங்கள்.. அனிருத்துக்கு இப்பவும் டஃப் கொடுக்கும் மங்காத்தா

இந்த படங்கள் வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில் வாரிசு படம் அமேசான் ப்ரைம் ஒடிடியில் வெளியானது. அதேபோல் துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ஒடிடியில் படங்கள் வெளியானால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வராது.

அதாவது வீட்டில் இருந்தே படத்தை பார்த்து விடுவார்கள். ஆனால் துணிவு மற்றும் வாரிசு படங்கள் ஓடிடியில் வெளியானாலும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. படம் வெளியாகி 50 நாட்களை தாண்டியும் ரசிகர்கள் இந்த படங்களை கொண்டாடுவது மிகப் பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Also Read : கொடூரமான வில்லனாக அருண் விஜய் கெத்து காட்டிய 5 படங்கள்.. அஜித்தையே மிரட்டி பார்த்த விக்டர்

இதே போல் தான் கொரோனா பரவலுக்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர். இப்போது மாஸ்டர் படத்தின் ரெக்கார்டை வாரிசு படம் முறியடித்துள்ளது. அதாவது இந்த படம் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இப்போது வரை பார்த்து உள்ளனர்.

இப்போதும் வாரிசு படத்தை திரையரங்குகளில் பார்த்து வருவதால் இன்னும் சில நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இதுபோன்று எந்த ஹீரோக்களுக்கும் இந்தியாவில் நடக்காது என்றும் தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரும் சாதனை படைத்து வருவதாக பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : மீண்டும் பற்றி எரியும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து.. விஜய்யை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய நடிகர்