கடுமையான மன உளைச்சலில் இருக்கும் விஜய் ஆண்டனி.. 2021ல் இருந்து பிடித்து ஆட்டும் கெட்ட நேரம்

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக இருந்து படிப்படியாக நடிகராக மாறியவர். இவர் 2012ஆம் ஆண்டு “நான்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக முத்திரை பதித்தார். சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்த இந்த  படம் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திருப்புமுனையை தந்தது.

“நான்” படத்திற்கு பின் முழுமையான நடிகராகவே தன் கேரியரை தொடங்கிவிட்டார். “நான்” படத்திற்குப் பின் அவருக்கு ஒரு பிரேக் கொடுத்த படம் என்றால் சலீம். இந்தப்படமும் அவருக்கு கைகொடுத்தது. இந்த இரண்டு படங்களும் ஒரே ஜெனரில்
உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் விஜய் ஆண்டனிக்கு பெற்றுக் கொடுத்தது.

அதன்பின் படங்கள் பெரிதளவு கை கொடுக்காவிட்டாலும், இவருக்கு 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “பிச்சைக்காரன்” படம் அதிரிபுதிரி ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் தாய்மார்கள் மத்தியில் விஜய் ஆண்டனி, ஒரு நிலையான இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

இப்பொழுது இவர் கிட்டத்தட்ட எட்டு படங்கள் கையில் வைத்திருக்கிறார். அதில் முக்காவாசி படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அந்த படங்கள் ஏன் இன்னும் ரிலீசாகவில்லை என்று தெரியவில்லை. பண பிரச்சனையா இல்லை படத்தில் ஏதும் பெண்டிங் ஒர்க் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.

கடைசியாக இவருக்கு நடிப்பில் வெளிவந்த படம் கோடியில் ஒருவன், அதுவும் 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் தான் வெளிவந்தது. அதன் பின் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் இவருக்கு படங்கள் ஏதும் வெளிவரவில்லை. இதனால் தீராத மன உளைச்சலில் இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.

தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மலை படிக்காத மனிதன், வள்ளி மயில்  போன்ற எட்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அதில் 5 படங்களை முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே சினிமா கேரியர் மோசமாக இருக்கிறது.