Actor Vijay and Vijay Antony: பொதுவாகவே பெரிய இடத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறு ஈசியாக அம்பலமாகிவிடும் என்பது தான் வழக்கம். அதுதான் விஜய் விஷயத்திலும் தற்போது நடக்கிறது. இவர் தான் எங்களுடைய தளபதி என்று சின்ன குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இவரை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட இவர் அவர்களுக்கு நல்வழி காட்டும் விதமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.
ஆனால் இவர் நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் பாடல் இவருடைய பிறந்த நாள் அன்று வெளியான நிலையில் இருந்து சர்ச்சையை ஏற்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது “நா ரெடி தான் வரவா” பாடல் முழுவதும் வாயில் சிகரெட்டை வைத்துக்கொண்டு வருவது அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
அது மட்டுமில்லாமல் அந்த பாடல் வரிகள் கூட ரொம்பவே மோசமாக இருப்பதால், அதை எப்படி இவரால் பாட முடிந்தது என்று சர்ச்சையை எழுப்பி வருகிறது. இதெல்லாம் ஒரு பொறுக்கி தனமான பாடல், பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவீங்களா? இதெல்லாம் அசிங்கம் பிடிச்ச வேலை என்று இவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் இப்பாடல் போதை பொருள் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மீது ஆன்லைன் மூலம் புகார் கொடுத்து வருகிறார்கள். அந்தப் புகாரில் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறது.
மேலும் பேரும் புகழும் அதிகரிக்கும் பொழுது தன்னடக்கமும் அதிகம் தேவை என்றும், அதற்கு ஏற்ற மாதிரி தன்னை வளர்த்துக் கொள்ளத் தெரிய வேண்டும் என்றும் இவரை விலாசி வருகிறார்கள். அத்துடன் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இளைஞர்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் சீண்டி பார்த்து அவர்களை உசுப்பேத்த வேண்டாம் என்று பலரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் நேற்று சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு பேரணியில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு போதை மிகவும் கொடுமையானது. வருங்கால இளைஞர்களின் வாழ்க்கையை அழித்துவிடும் என்று இவருடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார். இது வெறும் இவருடைய ஆதங்கம் மட்டும் இல்லாமல் விஜய்க்கு கொடுக்கும் சவுக்கடியாகவும் இவர் பேசி இருக்கிறார்.