மார்கன் விஜய் ஆண்டனிக்கு வெற்றியா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Maargan Collection Report: லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள மார்கன் நேற்று வெளியானது. க்ரைம் திரில்லர் கலந்து எடுக்கப்பட்ட படத்திற்கு தற்போது பாசிட்டி விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

படத்தைப் பார்த்த எல்லோரும் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு உரிய அத்தனை அம்சமும் இருக்கிறது. தேவையில்லாத எந்த காட்சிகளும் கிடையாது.

அதேபோல் படம் ஆரம்பித்ததுமே கதைக்குள் ஆடியன்ஸ் ஒன்றி போய் விடுகின்றனர். இதுவே இயக்குனரின் புத்திசாலித்தனம். ஒவ்வொரு காட்சியையும் அவர் அப்படித்தான் கொண்டு சென்றுள்ளார்.

மார்கன் விஜய் ஆண்டனிக்கு வெற்றியா.?

அதிலும் கொலைகாரன் யார் என்று இறுதிவரை நகத்தை கடித்த படி ஆடியன்ஸ் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். கிளைமாக்ஸ் அதைவிட வேற லெவல் என சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதனால் விஜய் ஆண்டனி அண்ட் டீம் இப்போது செம ஹாப்பி மூடில் இருக்கின்றனர். அந்த வகையில் மார்கன் படத்தின் முதல் நாள் வசூல் கூட அவர்களை இன்னும் சந்தோஷப்படுத்தி இருக்கிறது.

அதன்படி முதல் நாளில் மட்டுமே இப்படம் 87 லட்சத்தை வசூலித்துள்ளது. இது வார இறுதி நாட்களில் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதற்கு சோஷியல் மீடியாவில் வெளியான பாசிட்டிவ் விமர்சனங்களும் ஒரு காரணம்.

இந்த இரண்டு நாட்கள் வசூல் நிலவரத்தை பொறுத்து படம் எவ்வளவு லாபம் என தெரிய வரும். இது எப்படியோ விஜய் ஆண்டனிக்கு இந்த திரில்லர் கதைகள் நன்றாகவே கை கொடுக்கிறது.