விஜய்யிடம் பார்த்து வியந்தது இதுதான்.. நெல்சன் கூறியதைக் கேட்டா புல்லரிக்குது

விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் பீஸ்ட் படத்தைக் கொண்டாட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா, ஹலமதி ஹபீபு பாடல்கள் யூட்யூபில் வைரலானது. பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளிவர உள்ளது.

மேலும் மற்ற பீஸ்ட் பாடல்களையும் ரசிகர்கள் ஆவலோடு கேட்க காத்திருக்கின்றனர். இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை ரசிகர்கள் கேஜிஎஃப் vs பீஸ்ட் என்று பல மீம்ஸ்களையும் கமெண்ட்டுகளை அள்ளி குவித்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேஜிஎஃப் படத்தின் நாயகன் யாஷின் பேட்டி அமைந்தது. அதில் அவர் நானும் விஜய் சாரின் ரசிகன் தான். படத்தை பார்க்க நானும் ஆவலாக உள்ளேன். கேஜிஎஃப் மற்றும் பீஸ்ட் திரைப்படத்தை எல்லோரும் சேர்ந்து பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார், நடிகர் விஜய் எப்படி இந்த படத்திற்கு ஒப்புக் கொண்டார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் விஜய் சாரிடம் நான் 2 மணி நேரம் கதை சொன்னேன். உடனே அவர் ஓகே சொல்லிவிட்டார். இப்படிதான் பீஸ்ட் திரைப்படம் அமைந்தது. மிகவும் அமைதியான சிம்பிளான நபர். அவரை போன்று ஒரு டிசிப்ளின் ஆன நபரை யாராலும் பார்க்க முடியாது.

அந்த அளவுக்கு அவர் டிசிப்ளினை கடைபிடிப்பார். விஜய் சார் யாரைப் பற்றியும் குறை கூற மாட்டார், யாரைப்பற்றியும் பின்னால் பேச மாட்டார், அவர் எப்போதும் குழந்தைத்தனமாகவே நடந்துகொள்வார் . நான் அவரது ரசிகன் என்று சொல்வதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

தற்போது இந்த திரைப்படத்திற்காக நானும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி பீஸ்ட் படப்பிடிப்பின் போது ரஜினி சாரின் அடுத்த திரைப்படத்திற்கு கதை எழுத சொல்லி ஊக்கப்படுத்திய வரும் நடிகர் விஜய் தான். விஜய் சார் உடைய மோட்டிவேஷன் தான் என்னுடைய அடுத்த படமான தலைவர் 169 திரைப்படத்தை இயக்க எனக்கு ஊன்றுகோலாக அமைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.