2026 தேர்தல் மீது நம்பிக்கை குறைகிறதா.. விஜய்யின் மனநிலை என்ன.?

Vijay: விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் எப்போதுமே விமர்சிக்கப்பட்டு வருவதுண்டு. அதில் தற்போது அவர் நடித்து வரும் ஜனநாயகன் தான் அவருடைய கடைசி படம் என அவர் அறிவித்துள்ளார்.

ஆனால் திரை பிரபலங்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் அவர் இதை ஒரு முறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். அதேபோல் அவர் நிச்சயம் நடிப்பார் என்ற யூகமும் இருக்கிறது.

இந்த சூழலில் நடிகை மமிதா பைஜூ ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய்யிடம் அவருடைய கடைசி படம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அவர் 2026 தேர்தலை பொறுத்து முடிவு செய்வேன் என கூறியிருக்கிறார்.

விஜய்யின் மனநிலை என்ன.?

இதை அவர் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படி ஒரு கருத்து இருக்கும் நிலையில் இந்த செய்தியும் விவாதமாக மாறி இருக்கிறது. விஜய் அரசியலை புரிந்து கொண்டாரா?

2026 தேர்தல் மீதான நம்பிக்கை அவருக்கு குறைகிறதா? என பல கேள்விகள் எழுந்து வருகிறது. இதற்கு சினிமா விமர்சகர்கள் நிச்சயம் அப்படி இருக்க வாய்ப்பு கிடையாது.

தற்போது வரை அவர் முதல்வர் நாற்காலியை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறார். ஒருவேளை அது நடக்காத பட்சத்தில் மீண்டும் நடிப்புக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அடுத்த வருட தேர்தல் தான் இதற்கான பதிலாக அமையும்.

அதனால் விஜய் நம்பிக்கை இழந்து விட்டார் பயந்துவிட்டார் என வரும் செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி தான் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.