Actor Vijay: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருப்பவர் தான் விஜய். இவருடைய அடுத்த படமான லியோ படத்தின் அப்டேட்டை காட்டிலும், அவருடைய அரசியல் பிரவேசம் பற்றிய தகவல் தான் சோசியல் மீடியாவை ரணகளம் செய்கிறது.
அதிலும் இப்போது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் திடீரென்று அம்பேத்கர், பெரியார் இவர்களின் வரிசையில் இப்போது காமராஜரின் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடி அவர்களது சிலைக்கு மாலை அணிவித்தனர். அதன் பின்பு நூதன முறையில் அரசாங்கத்தையும் சாடினர்.
ஒவ்வொரு வருடமும் காமராசரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர். அன்றைய தினத்தில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 234 தொகுதிகளிலும் பாடசாலையை அமைத்திடும் திட்டத்தை நேற்று முதல் விஜய் துவங்கி வைத்தார்.
இந்த பாடசாலையின் மூலம் பள்ளி செல்ல முடியாத ஏழை எளிய குழந்தைகள் பயன் அடைய முடியும். அது மட்டுமல்ல இதில் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், பென்சில், பேனா போன்றவையும் வழங்கப்படுகிறது.
அது மட்டுமல்ல காமராஜரின் பிறந்த நாளன்று விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நூதன முறையில் அன்பளிப்பை வழங்கி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். தற்சமயம் சமையலில் அத்யாவசிய பொருளாக இருக்கக்கூடிய தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேலாக விற்கப்படுகிறது.
இந்த விலைவாசியை கண்டிக்கும் விதமாகவும், மக்களுக்கு பயன் அளிக்கும் விதமாக விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பொதுமக்களுக்கு தலா ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகின்றனர். இது இப்போது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.