தீமைக்கு எதிராய் நானும் வருவேன் தனி ஒருவனாய்.. ஜனநாயகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஃபேன்ஸ்

Jana Nayagan-Vijay: விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் அடுத்த வருட பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9 வெளியாகிறது. அதே தினத்தில் பராசக்தி படமும் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

மே மாதத்திற்கு பிறகு விஜய் தீவிர அரசியலில் களம் இறங்க உள்ளார். அதனால் இதன் படப்பிடிப்பை விரைவில் முடித்துக் கொடுப்பதற்காக அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

இருப்பினும் சமூக பிரச்சினை தொடர்பாக அவர் அறிக்கை மூலம் குரல் கொடுத்து வருகிறார். அதில் நேற்று படப்பிடிப்பில் இருந்தபோது அவரைக் காண ரசிகர்கள் அங்கு ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஜனநாயகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஃபேன்ஸ்

அதை தெரிந்து கொண்ட விஜய் வெளியில் வந்து அவர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதே சமயம் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றும் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. அதில் தீமைக்கு எதிராய் நானும் வருவேன் தனி ஒருவனாய் உன் முன் படையெடுத்து என செய்தித்தாள்களில் இருப்பது போல் போஸ்டர் உள்ளது.

அதிலும் விஜய்யின் லுக் மெர்சல் பட ஸ்டைலில் இருக்கிறது. நேற்று அவர் ரசிகர்களை சந்தித்தபோதும் இந்த தோற்றத்தில் தான் இருந்தார்.

இப்படியாக ஜனநாயகனின் டீமுக்கே ரசிகர்கள் புது போஸ்டர் விட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். தற்போது இது ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில் இன்று புது அப்டேட் ஒன்று வர இருப்பது குறிப்பிடத்தக்கது.