Vijay: இன்னைக்கு கல்யாணம் ஆகி நாளைக்கு புள்ள பெத்து விட முடியுமா என ஊர் பக்கத்தில் கிண்டலாக சொல்வார்கள். ஆனால் இது தமிழக வெற்றிக் கழகத்தை பார்க்கும் போது சரியாகத்தான் இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதிலிருந்தே இக்கட்சி பற்றி வெளிவரும் ஒவ்வொரு செய்தியும் நம்ப முடியாததாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்துள்ளது. அதில் பேசிய புஸ்ஸி ஆனந்த் விரைவில் இரண்டு கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் அதுதான் நம்முடைய இலக்கு என்று கூறியிருக்கிறார்.
இதைப் பார்த்த ஒட்டுமொத்த மக்களும் யாரு சாமி நீ என்ற ரேஞ்சுக்கு கிண்டல் அடித்து வருகின்றனர். ஏனென்றால் 50 ஆண்டு காலம் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் அதிமுக, திமுக என்ற இரு பெரும் கட்சிகளே இரண்டு கோடி உறுப்பினர்களை தான் வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது நேற்று கட்சியை ஆரம்பித்து விட்டு நாளை முதல்வர் நாற்காலியில் உட்கார ஆசைப்பட்டால் எப்படி?
பதவி ஆசையில் கண்ணு மண்ணு தெரியாமல் டார்கெட் வைக்கும் விஜய்யை இப்படித்தான் விமர்சித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்காக புது வாக்காளர்களின் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதை எல்லாம் கவனித்து பெண்கள், மாணவர்கள் என அனைவரையும் கட்சியில் சேர்க்க வேண்டும்.
மேலும் தொகுதி வாரியாக முகாம்கள் அனைத்து உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை விடப்பட்டிருக்கிறது. விரைவில் இரண்டு கோடி இலக்கு என்பதெல்லாம் எந்த நம்பிக்கையில் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து செயல்படுத்த நினைத்தால் அம்மஞ் சல்லிக்கு பிரயோஜனம் இருக்காது. அதேபோன்று ஒரு மாநாடு நடத்தவில்லை. மக்களை களத்தில் சந்திக்கவில்லை. ஆனால் இரண்டு கோடி உறுப்பினர்கள் மட்டும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் விஜய் இந்த அரசியலில் எப்படி ஜொலிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.