அஜித்திற்காக விட்டுக்கொடுத்த விஜய்.. இப்படிப்பட்ட மனசு யாருக்கு வரும்

ஒவ்வொரு பண்டிகைக்கும் பெரிய நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்து திரையரங்கை விழாக்கோலம் ஆக்குவார்கள். அப்படி சினிமா ரசிகர்களால் எதிரும் புதிருமாக ஆக்கப்பட்ட தல-தளபதி படங்கள் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

ஆனால் இருவரது படமும் ஒரே நாளில் ரிலீஸானால் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக அஜீத்துக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார் விஜய். அஜித் நடிப்பில் தல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் படம்தான் துணிவு. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

துணிவு படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் அனைத்தும் இனி வரும் நாட்களில் படுஜோராக பார்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், ஜனவரி 12 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரிலீஸ் செய்ய உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே உறுதியான தகவல் வெளியானது. ஆனால் தற்போது துணிவு படம் ரிலீஸான அடுத்த நாளான ஜனவரி 13 ஆம் தேதி அன்று வெள்ளிக்கிழமை அன்று வெளியாகிறது.

இப்படி ஒரு நாள் முன்னும் பின்னுமாக ரிலீஸ் ஆகும் இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் இரண்டிற்கும் சமமான திரையரங்குகள் கிடைப்பது நிச்சயம். அதுமட்டுமின்றி ஒரு நாளைக்கு முன்பே அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் செய்ய உள்ளதால், விட்டுக் கொடுத்த விஜய் பெரிய மனசுக்காரர் என்று இதை வைத்தும் தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கெத்த காட்டுகின்றனர்.

ஆகையால் அடுத்த வருடம் துவக்கத்திலேயே தைப்பொங்கலை தல தளபதி ரசிகர்கள் திரையரங்குகளில் வாரிசு, துணிவு இரண்டு படங்களையும் தாறுமாறாக கொண்டாட காத்திருக்கின்றனர். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் துணிவு படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்.

அதேபோன்று தான் தளபதியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் படமும் கலவையான விமர்சனத்தை பெற்றதால் வாரிசு படம் நிச்சயம் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.