மீண்டும் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த தளபதி விஜய்.. கொண்டாடும் விஜய் டிவி தம்பதிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தம்பதி சகிதமாக பங்கேற்று பிரபலமானவர்கள் தான் செந்தில் ராஜலட்சுமி தம்பதி. மேலும் நாட்டுப்புற பாடல்கள் பாடி ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார்கள். இவர்களின் பாடல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் செந்தில் ராஜலட்சுமி தம்பதிக்கு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி பிகில் படத்தில் இடம்பெற்ற நெஞ்சுக்குள் குடியிருக்கும் என்ற பாடலை பாடினார்கள். பாட்டும் மிக அருமையாக வந்திருந்ததாம்.

இதனையடுத்து இப்பாடலை கேட்ட விஜய் பாட்டு சூப்பராக இருக்கிறது என பாராட்டியதோடு, இந்த பாடலை நானே பாடுகிறேன் என்று கூறிவிட்டாராம். அதனால் மறுப்பு தெரிவிக்காமல் விஜய் பாடிய பாடலையே படத்தில் வெளியிட்டு விட்டார்கள். இதனால் செந்தில் ராஜலட்சுமி தம்பதிக்கு கிடைத்த வாய்ப்பு கைநழுவி சென்றது.

இந்நிலையில் தன்னால் இழந்த வாய்ப்பை தானே சரிசெய்ய விஜய் முன்வந்துள்ளார். அதன்படி அவரது புதிய படத்தில் ஓப்பனிங் பாடலை பாடும் வாய்ப்பை செந்தில் ராஜலட்சுமி தம்பதிக்கு விஜய் வழங்கியுள்ளாராம். தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 66வது படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார். தமன் இசையில் பாடல்கள் உருவாக உள்ளது. இந்நிலையில் தமன் பாடல் கம்போசிங் பணியை ஆரம்பித்து விட்டாராம்.

மேலும் இந்த படத்தின் முதல் பாடல் தயாராகி விட்டதாகவும், இந்த பாடலை தான் செந்தில் ராஜலட்சுமி தம்பதி இணைந்து பாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தன்னால் இழந்த வாய்ப்பை தானே சரிசெய்யும் விதமாகவே விஜய் இந்த வாய்ப்பை வழங்கி உள்ளாராம். மேலும் செந்தில் ராஜலட்சுமி தம்பதி விஜய் டிவி பிரபலம் என்ற காரணத்தாலும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.