அரசியல் என்ட்ரிக்கு போடும் அச்சாரம்.. லோகேஷுக்கு கண்டிஷன் போட்ட விஜய்

கடந்த சில நாட்களாகவே விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த பல தகவல்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது அவர் தன் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யுங்கள் என உத்தரவிட்டிருந்தார்.

அந்த விஷயம் வெளியான சில நிமிடங்களிலேயே பல விமர்சனங்கள் எழ தொடங்கியது. அதிலும் இந்த விவகாரம் அவருடைய அரசியல் வருகைக்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இது சோசியல் மீடியாவில் ஒரு விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் இப்போது வரை இந்த சலசலப்பு அடங்கவில்லை.

இந்நிலையில் விஜய் அடுத்ததாக ஒரு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறாராம். அதாவது தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் லியோ திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த சில நாட்களிலேயே அடுத்த கட்ட ஷூட்டிங்கை லோகேஷ் ஆரம்பித்திருக்கிறார்.

மேலும் விரைவில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான வேலையையும் அவர்கள் தொடங்க இருக்கின்றனர். இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவரும் விஜய்யிடம் கலந்து ஆலோசித்து இருக்கின்றனர். மேலும் வழக்கம் போல் நேரு ஸ்டேடியத்தில் விழாவை விமரிசையாக நடத்தவும் அவர்கள் பிளான் செய்திருக்கின்றனர்.

ஆனால் விஜய் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ஏனென்றால் எப்போதும் போல் இந்த விழா நடக்கக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். அதனாலேயே அவர் தற்போது தென் மாவட்டங்களில் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தலாம் என்று யோசனை கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அங்குள்ள ரசிகர்களையும் தான் சந்திக்க வேண்டும் என்று கண்டிஷனாக கூறிவிட்டாராம்.

அந்த வகையில் லியோ இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மூன்று இடங்களில் ஏதோ ஒரு இடத்தில் தான் நடைபெற இருக்கிறது. இதன் மூலம் தென் தமிழ்நாட்டு ரசிகர்களையும் சந்தித்து தன் அரசியல் வருகைக்கான ஒரு அச்சாரத்தையும் அவர் போட இருக்கிறார். இது போன்ற இன்னும் பல அதிரடி வேலைகளையும் அவர் திட்டமிட்டுள்ளாராம். தற்போது விஜய் போட்டுள்ள இந்த கண்டிஷனுக்கு லோகேஷ் மற்றும் தயாரிப்பாளர் இருவரும் தலையாட்டி உள்ளனர்.