Actor Vijay: விஜய் தற்போது படங்களில் எந்த அளவுக்கு பிசியாக நடித்துக் கொண்டு கண்ணும் கருத்துமாக இருக்கிறாரோ, அதே அளவிற்கு அரசியலிலும் இறங்கி ஒரு கை பார்த்து விடலாம் என்று வெற்றியை நோக்கி விரைந்து கொண்டு வருகிறார். ஆனாலும் இவருக்கு பெரிதாக அந்த அளவிற்கு அரசியலில் அனுபவம் இல்லாததால் சில விஷயங்களை பலமுறை யோசித்த பின்பே ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.
அதனாலேயே இவர் அரசியலுக்கு வருகிறார் என்று உறுதியான நிலையிலும் அவசரமாக எந்த விஷயத்திலும் இறங்காமல் மெதுவாக செய்து வருகிறார். அந்த வகையில் இவருடைய அரசியல் கட்சியை இன்னும் உறுதி செய்யவில்லை. முதலில் இவருடைய கட்சியை அறிவித்தால் மட்டுமே அதற்கேற்ற மாதிரி கட்சி கொடியை மக்களிடம் அறிவிக்க முடியும்.
அடுத்ததாக விஜய் இன்னும் வாயைத் திறந்து நிறைய விஷயங்களை பேசி மக்களோடு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சில விஷயங்களை செய்தால் மட்டுமே இவருக்கு எதிராக நிற்கக்கூடிய நிறைய பேருக்கு இவர் மீது ஒரு பயம் ஏற்படும். இல்லை என்றால் அண்ணாமலை மற்றும் திமுக செய்யும் செயல்கள் அனைத்தும் இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி போய்விடும்.
அதனால் அவர்களை முந்த வேண்டுமென்றால் கூடிய விரைவில் கட்சியை அறிவிப்பது இவருடைய அரசியலுக்கு பாலமாக இருக்கும். மேலும் தற்போது அண்ணாமலை அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை படுவேகமாக செய்து கொண்டு வருகிறார். இவரை முந்த வேண்டும் என்றால் அண்ணாமலை பாதயாத்திரை போவது போல், தமிழக முழுவதும் விஜய்யும் போக வேண்டும்.
அப்பொழுது தான் திமுகவுக்கு எதிராக விஜய்யால் அரசியல் செய்து கட்சியை நிலை நாட்ட முடியும். இப்படி நேரத்தை வீணடித்துக் கொண்டு லேட்டாக கட்சியை அறிவித்தால், அதற்குள் அண்ணாமலை வளர்ந்து விடுவார். பிறகு அரசியலில் காணாமல் போவதற்கு வாய்ப்புகள் வந்துவிடும். இதை மனதில் வைத்துக் கொண்டு, விஜய் வேக வேகமாக செயல்பட வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவுரை கொடுத்திருக்கிறார்.
பிரஷாந்த் கிஷோர் யார் என்றால் பல கட்சிகள் ஜெயிப்பதற்கு அறிவுரைகளை கொடுத்து வழிகாட்டியாக இருக்கக்கூடியவர். மேலும் விஜய் தற்போது வெளிநாடு சென்றிருக்கிறார். இதுவும் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட பயணம் தான். அடுத்ததாக விஜய் சென்னை வந்ததும் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் வேகமாக நடைபெறும். இதை தொடர்ந்து விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோரின் சந்திப்புகள் நடைபெறும்.