பிரபாஸின் 500 கோடி பட்ஜெட் படத்தில் ஒப்பந்தமான விஜய்யின் புலி பட நடிகர்.. மனுஷன் கெத்து காட்டுறாரு!

விஜய்யின் புலி படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு பிரபாஸ் 500 கோடி பட்ஜெட்டில் நடித்துக் கொண்டிருக்கும் படம் ஒன்றில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை அந்த நடிகரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் படங்களில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்த திரைப்படம் புலி. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் கடைசியில் குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்ற படமாக மாறிவிட்டது.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கன்னட நடிகர் கிச்சா சுதீப். கன்னட சினிமாவில் ஹீரோவாக பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் சுதீப் மற்ற மொழி திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

புலி, நான் ஈ போன்ற படங்களில் இவரது வில்லத்தனமான கதாபாத்திரங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்திய சினிமாவில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நவீன கால டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் என்பவர் நடித்து வருகிறார். ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள் அனைத்துமே மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிறது என்பதும் கூடுதல் தகவல்.

kichcha-sudheep-cinemapettai
kichcha-sudheep-cinemapettai