வாரிசு படத்தில் நண்பர் அஜித்தை மறைமுகமாக தாக்கிய விஜய்.. இந்த மாதிரி ட்விஸ்ட்டை நீங்களே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க

நேற்று முன்தினம் ரிலீசான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு போன்ற இரண்டு படங்களையும் திரையரங்கில் அவர்களுடைய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தல, தளபதி இருவரில் யார் நம்பர் ஒன் என அவர்களது ரசிகர்கள் அடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் மறுபுறம் திரையைத் தாண்டி நண்பர்களாக இருக்கும் அஜித், விஜய் இருவரிடமே இந்தப் போட்டி மனப்பான்மை இருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் வாரிசு படத்தில் அஜித்தை மறைமுகமாக தாக்கியுள்ளார் விஜய். அந்த அளவிற்கு வாரிசு படத்தில் ஒரு தரமான சம்பவம் நடந்திருக்கிறது.

Also Read: விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. அதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு படத்தில் ஒரு சுவாரஸ்யமான காட்சி என்னவென்றால் வில்லன்கள் டேட்டிங் ஆப் மூலம் கடத்தி விடுவார்கள். இதை ஒரு சமூக பிரச்சனையாக காட்டி உள்ளனர். அப்போது போலீசை நுழைய முடியாத ரவுடியின் இடத்தில் விஜய் நுழைந்து தனது அண்ணனின் மகளை காப்பாற்றுவார்.

ஓவர் அலப்பறை கொடுக்கப்பட்ட அந்த ரவுடியை தலைகீழாக தொங்கவிட்டு அந்த மைக்கில் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தை வச்சு செஞ்சிருப்பார் விஜய். இதே மைக்கேல் என்ற கதாபாத்திரம் தான் துணிவில் அஜித்துக்கு வைக்கப்பட்டிருக்கும். இது எப்படி ஒத்துப்போனது என்று தெரியவில்லை.

Also Read: தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா அஜித் மற்றும் விஜய்.? இன்னும் தெளிவு பெறாத சினிமா மோகம்

இது தெரிந்து நடந்திருக்கிறதா அல்லது பிளான் போட்டு வாரிசு படக் குழு செய்திருக்கிறதா என்பதை தல தளபதி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் 8 வருடங்களுக்குப் பிறகு திரையில் மோதிக் கொள்ளும் அஜித், விஜய் இருவரை குறித்து யார் நம்பர் ஒன் என்ற கேள்வி தொடர்வதால், அதற்கு பதில் கொடுக்கும் விதமாக வாரிசு படத்தில் அஜித்தின் மைக்கேல் என்ற பெயர் கொண்ட வில்லனை தளபதி அடித்து துவைத்திருக்கிறார்.

இந்த மாதிரியான ஒரு டிரஸ்ட் வாரிசு படத்தில் இருக்கும் என்பது யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் அஜித்தை மறைமுகமாக விஜய் வாரிசு படத்தின் சீனில் தாக்கியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் தல ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Also Read: ஆட்டநாயகனாக முன்னேறிய விஜய் எங்க தெரியுமா? துணிவு, வாரிசு 2 நாள் கலெக்சன் இதுதான்!