கட்சி நிர்வாகிகளுக்கு தளபதி வச்ச செக்.. குறளி வித்தையை அறிமுகப்படுத்திய விஜய்யின் அடுத்த மூவ்

Actor Vijay introduced a new thing in TVK party: தமிழக வெற்றிக் கழகம்(TVK) என்ற கட்சியை துவங்கிய பின்பு, தளபதி விஜய் அடுத்தடுத்து புதுப்புது விஷயங்களை கொண்டு வருகிறார். அதோடு இப்போது அவர் எடுத்திருக்கும் முடிவின் மூலம் TVK கட்சி நிர்வாகிகளுக்கு தளபதி சரியான செக் வைத்திருக்கிறார்.

அடுத்த வாரத்தில் TVK உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்த போகிறார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்போருக்கு மட்டுமே கட்சி நிர்வாகப் பொறுப்புகள் வழங்கப்படும் என்ற அதிரடி முடிவையும் விஜய் எடுத்துள்ளார். இப்போது தளபதியின் டார்கெட் இரண்டு கோடி உறுப்பினர்களை தன்னுடைய கட்சியில் சேர்ப்பது தான்.

இதற்கு ஏதுவாக உறுப்பினர் சேர்க்கைக்கென செயலி மூலம் ஒவ்வொருவரும் தங்களுக்கான எண் மூலம் உறுப்பினரை சேர்க்கலாம். இதில் யார் அதிக உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் கட்சிப் பொறுப்புக்கள் வழங்கப்படும். இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய TVK கட்சி தலைவர் தளபதி விஜய் திட்டமிட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

உறுப்பினர் சேர்க்கைக்காக அறிமுகப்படுத்திய ஆப்(APP)

அதோடு கட்சி ரீதியாக 100 மாவட்டங்களையும் உருவாக்கி நிர்வாகிகளை நியமித்த பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வரும் ஏப்ரல் மாதத்தில் TVK கட்சியின் முதல் மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த விஜய் முடிவெடுத்துள்ளார். இப்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் விஜய்யின் அரசியல் மூவ் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் TVKVijay என்ற ஹேஷ்டேக் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. இவர் போற ஸ்பீட பாத்தா இதுவரை எந்த கட்சியிலும் இல்லாத 2 கோடி உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்த்து விடுவார் போல் தெரிகிறது. அதோடு உறுப்பினர்களை சேர்த்தால் மட்டுமே பொறுப்புக்கள் வழங்கப்படும் என நிர்வாகிகளுக்கு ஆப்பு வச்சதால், இந்த செயலி மூலம் அடுத்த வாரத்தில் இருந்து உறுப்பினர் சேர்க்கை சூடுபிடிக்கப் போகிறது.