ஆரம்பத்தில் எஸ் ஏ சந்திரசேகர் அவருடைய படங்களில் விஜய்யை நடிக்க வைத்தார். ஆனால் அந்த படங்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தனக்கு தெரிந்த சினிமா பிரபலங்கள் இடம் விஜய்க்கு வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார்.
மேலும் தன்னுடைய கடின உழைப்பால் இப்போது எட்ட முடியாத உயரத்தில் தளபதி வளர்ந்து நிற்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் உருவாக இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக அட்லீ விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் தளபதி 70 படத்துடன் விஜய் சினிமாவை கைவிடும் திட்டத்தில் உள்ளாராம். அதாவது இப்போது 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் விஜய் போட்டியிட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தேர்தலில் பங்கு பெறுவதற்கான ஆயத்தமும் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி லியோ படத்தின் ஆடியோ லாஞ்சையும் மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். இவ்விழா ஒரு மாநாடு போல ஏற்பாடு செய்ய உள்ளது. அதில் விஜய் அரசியல் நுழைவு பற்றி பேச இருக்கிறார்.
ஆகையால் இன்னும் மூன்று படங்கள் முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக விஜய் செயல்பட இருக்கிறாராம். இதனால் தளபதி 70 படத்துடன் இவரது சினிமா கேரியர் முடிய இருக்கிறது. மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படமாக எடுக்கப்பட உள்ளனராம். அதுவும் இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக கூடுதல் தகவலும் வெளியாகி இருக்கிறது.
பொதுவாக வெற்றிமாறன் துணிச்சலான கதைகளை கையாளக் கூடியவர். சமீபத்தில் சூரியை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கிய விடுதலை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ள வெற்றிமாறனுக்கு தளபதி 70 படம் கிடைத்திருக்கிறது.
மேலும் விஜய் திடீரென சினிமாவுக்கு முழுக்கு போடுவதற்கான காரணம் என்னவென்றால் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்தால் தோல்வி நிச்சயம். அதனால் நடிப்பை நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினால் எப்படியும் வென்று விடலாம் என்று மூத்த தலைவர் ஒருவர், கரு பழனியப்பா மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் விஜய்க்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆகையால் விஜய் இந்த முடிவுக்கு வந்துள்ளதால் திரை உலகம் அதிர்ச்சியில் உறைந்து உள்ளது.