Actor Vijay: விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தை வெளியிட்ட கையோடு ஜெட் வேகத்தில் லியோ படப்பிடிப்பை ஆரம்பித்தார். ரொம்பவே பரபரப்பாகவும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெளியிட்டு ரசிகர்களை குஜால் படுத்தி வந்தார். இதனால் இவருடைய ரசிகர்கள் எப்பொழுது அக்டோபர் 19ஆம் தேதி வரும் என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் லியோ படப்பிடிப்பு சீக்கிரத்தில் முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தனை இருந்ததால் இறுதி கட்டத்திற்கு போய்விட்டது. அத்துடன் இதில் மிகப் பிரமாண்டமாக 2000 பேர் நடனம் ஆடுபவர்களை வைத்து பத்து நாட்களாக ஒரு பாடல் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பாடலை விஜய் தான் பாடியிருக்கிறார்.
இப்படி எந்த அளவுக்கு லியோ படம் வேகமாக வளருகின்றதோ அதே அளவுக்கு விஜய்யின் அரசியலும் வளர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். இந்த படத்தை வைத்து தான் அரசியல் ரீதியான அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறார். அதாவது இப்படத்தின் ஆடியோ லாஞ்சில் இவருடைய கட்சி பெயரை அறிவிக்க இருக்கிறார்.
இப்படி இருக்கையில் தற்பொழுது திடீரென்று லியோ படப்பிடிப்பை ஒத்தி வைத்து விட்டார். அதற்கு காரணம் விஜய் அரசியல் ரீதியாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்ச்சியான மாணவர்களை நேரில் சந்தித்து பரிசுகளை வழங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் இதை முடிப்பதற்கு எப்படியும் இரண்டு, மூன்று நாட்கள் ஆகும் என்பதற்காக படப்பிடிப்பை நிறுத்த சொல்லிவிட்டார்.
ஏனென்றால் அரசியலில் இப்படி வேகமாக முயற்சிகள் செய்து வந்தால் மட்டுமே லியோ படத்தின் ஆடியோ லான்ச் அன்றைக்கு இவரால் முழுமூச்சாக இவருடைய கட்சி பெயரை அறிவிக்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதற்கு காரணம் கண்டிப்பாக லியோ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் அவர்களின் அனைவரும் கவனமும் இதில் இருப்பதால் அன்றைக்கே அரசியலில் ஒரு கை பார்த்து விடலாம் என்பதற்காக.
இவருடைய மாஸ்டர் பிளான் ஒரு கல்லில் ரெண்டு விஷயத்தை முடித்து விடலாம் என்பதுதான். ஆனால் அதற்காக லியோ படபிடிப்பை நான் சொல்லும் போது ஆரம்பிக்கலாம் என்று இவர் சொல்லியதால் லோகேஷ் மற்றும் பட குழுவும் ரொம்பவே அப்செட் ஆக இருந்து அமைதி காத்து வருகிறார்கள்.