எல்லாத்தையும் ஓரங்கட்டிய விஜய்.. 4 விஷயங்களுக்கு வழிவிடாமல் தளபதி தட்டி தூக்கிய பரபரப்பான மேடை

Actor Vijay: இரு தினங்களுக்கு முன்பு விஜய் நடத்திய மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட நல்லபடியாக முடிந்து விட்டது. இதில் சுமார் 1500 மாணவர்களுக்கு தன் கையாலேயே பரிசு வழங்கியுள்ளார். அதிலும் கிட்டத்தட்ட 13 மணி நேரம் நின்று கொண்டே பரிசுகளை வழங்கி முடித்திருக்கிறார்.

அடுத்ததாக இந்த நிகழ்ச்சியை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்ய எத்தனையோ சேனல்கள் வந்த நிலையில் அவர்களை எல்லாம் நிராகரித்திருக்கிறார். ஆனால் அதிகப்படியாக ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை யூடியூப் சேனல்களுக்கு மட்டும் வழங்கியது ஒரு விதமான இவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.

ஏனென்றால் யூடியூப் சேனல்களை பெரும்பாரியாக இளைஞர்கள் தான் நடத்தி வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு இவர் கொடுக்கும் ஒருவிதமான நல்வழி காரணமாக கூட இப்படி செய்திருக்கலாம். அத்துடன் மேடையில் எந்த கூட்டமும் இவர் சேரவிடவில்லை.

அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சி ஒன்றும் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி இல்லை என்பதால் இதற்கு அறவே முட்டுக்கட்டை போட்டு விட்டார். இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார். அத்துடன் எந்த விதத்திலும் இது அரசியல் சார்ந்த நிகழ்ச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.

மேலும் மாணவர்களுக்கு போர்த்தப்பட்ட சால்வையை கூட இவருக்கு பக்கத்தில் இருந்து யாரும் எடுத்து கொடுக்காத அளவிற்கு கூட்டத்தை சேர விடவில்லை. அத்துடன் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் பொழுது கூட இது ஒரு பிரண்ட்லியான அட்வைஸ் தான் தேவைப்பட்டால் எடுத்துக்கோங்க இல்லை என்றால் அப்படியே விட்டு விடுங்க என்று பெருந்தன்மையுடன் பேசி இருக்கிறார்.

ஏன் இன்னும் சொல்ல போனால் தமிழ் சினிமாவில் எத்தனையோ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள் இருக்கும் பொழுது அவர்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டார். இப்படி சில விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து மாணவர்களுக்கான நிகழ்ச்சியை சரிவர செய்து முடித்திருக்கிறார்.