தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய்யின் ஆரம்ப காலகட்ட படங்களில் அதிகம் 18 பிளஸ் காட்சிகள் இருந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இத்தனைக்கும் அந்த படங்களை இயக்கியவர் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர்.
அதன் பிறகு இயக்குனர் விக்ரமன் விஜய்க்கு வேறு ஒரு பாதையைக் காட்டி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார். விஜய்யின் இளமை காலங்களில் அவருக்கு ஏகப்பட்ட காதல் கிசுகிசுக்கள் வந்ததாகக் கூறுகின்றனர்.

அதில் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் சங்கவி. அந்த காலத்தில் கவர்ச்சி கட்டழகியாக வலம் வந்த சங்கவிக்கும் விஜய்க்கும் இடையில் ஒருவித அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது எனவும், இருவரும் நெருங்கி பழகி வந்தனர் எனவும் அப்போதே பத்திரிகைகளில் எழுதினர்.
விஜய்யின் அப்பா இயக்கிய சில படங்களின் மூலம் அறிமுகமானவர் தான் சங்கவி. இருவருக்குள்ளும் ஆரம்ப காலகட்டங்களில் நெருக்கம் காட்டி நடித்ததால் காதல் இருந்தது என்னவோ உண்மைதான். அந்த சமயங்களில் விஜய் இரவு நேரங்களில் சங்கவியை பார்க்க ரகசியமாக செல்வாராம்.

இதனை பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் வீடியோ ஒன்றில் விஜய் சங்கவியை பார்க்க இரவு நேரங்களில் செல்வார் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சொல்வது நம்பத் தகுந்த வகையில் இருப்பதால் அவருக்கு பலரும் சப்போர்ட் செய்து வருகின்றனர். இருந்தாலும் பார்வையாளர்களுக்காக பலரையும் டேமேஜ் செய்வது சினிமாக்காரர்களை கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.