இன்றுவரை நண்பர்களை மறக்காத விஜய்.. திடீரென ரகசிய சந்திப்பு

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அச்சத்தில் உள்ளனர். மேலும் விஜய் ரசிகர்கள் தாண்டி பல பிரபலங்களும் பீஸ்ட் படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர்.

ஆனால் விஜய் இப்படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது தனது நண்பர்களை பார்க்க சென்றுள்ளார். தனது லயோலா கல்லூரியில் படிக்கும்போது நெருங்கிய நண்பர்களை நேற்று சந்தித்துள்ளார். அப்போது இவர்கள் விஜயின் பீஸ்ட் படத்தைப்பற்றி கேட்டுள்ளனர். அதற்கு விஜய் படத்தை திரையில் பார்த்து விட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் நண்பர்கள் இனிமேல் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது அனைவரும் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு விஜய் நான் எப்போதும் சந்திக்க தயாராகத்தான் இருக்கிறேன் நீங்கள்தான் தொழில் தொழில் என்று சந்திக்காமல் இருக்கிறீர்கள் என தனது நண்பர்களுடன் பேசியுள்ளார்.

மேலும் தனது நண்பர்கள் பலரும் தொழில்துறையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பொருளாதார உதவியையும் விஜய் செய்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தை யாருக்கும் தெரியக்கூடாது என விஜயை அவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது நண்பர்கள் தனக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்களிடம் இந்த விசயத்தை பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த செய்தி கோடம்பாக்கம் வட்டாரத்தில் சுற்றி வருகிறது.

மேலும் விஜய்யின் கொட்டிவாக்கம் வீட்டில் இவர்கள் சந்தித்துள்ளனர். தனது அடுத்தடுத்த படங்களை பற்றி பேசிய விஜய் பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும், அந்த மாதிரியான கதாபாத்திரங்களை தற்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் தன்னிடம் கொண்டு  வருவதாக கூறியுள்ளார்.

அதனால் தான் அவர் அவர்களுடன் பணியாற்ற விரும்புவதாகவும், அதற்கு ஏற்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .அதுமட்டும் இன்றி பீஸ்ட் படத்தின் கதை கூட வித்தியாசமாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் தற்போது விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.