புருஷனை அறிமுகப்படுத்தாமல் கர்ப்பிணியான விஜய் பட நடிகை.. பிடிச்சாலும் புளியம் கொம்பு

பொதுவாக நடிகைகள் தமிழ் சினிமாவில் அவ்வளவு ஈஸியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட முடியாது. ஆனால் இதுவே முன்னணி ஹீரோளுடன் இணைந்து ஜோடி சேர்ந்து விட்டால் அவர்கள் எளிதில் பிரபலமாகிவிடலாம். அப்படித்தான் விஜய் பட நடிகையும்.

இவர் என்னதான் அக்கட தேசத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தாலும் தமிழில் விஜய் கூட ஜோடி சேர்ந்த பிறகு தான் நமக்கு மிகவும் பரிச்சயமானார். அதுவும் தமிழில் விஜய் கூட நடிப்பதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் நமக்கு இவர் யார் என்று கூட தெரியாது.

அப்படிப்பட்ட நடிகை வேறு யாருமில்லை விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்த இலியானா. இவர் சமீபத்தில் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அப்பொழுது அதை பார்த்த பலரும் என்னது இவங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது.

அதாவது இந்த நடிகைக்கு எப்ப திருமணம் ஆச்சு அதுவே தெரியலை ஆனா அதுக்குள்ள கல்யாணமா என்று சொல்லும் படியாக தான் இவரது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் அதற்கு யார் காரணம் என்று குறிப்பிடவில்லை. அத்துடன் இவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

என்னதான் ரகசியமாக திருமணம் செய்து இருந்தாலும் முதலில் இவர் யாரை கல்யாணம் பண்ணி இருக்கிறார் என்று இவருடைய புருஷனை காட்டின பிறகு கர்ப்பமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டால் நன்றாக இருந்திருக்கும். பொதுவாகவே நடிகைகள் அனைவரும் திருமணம் செய்து கொள்வது தொழிலதிபராக தான் இருக்கும்.

அப்படித்தான் நடிகை இலியானாவும் தொழில் அதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதுவரை இன்னும் திருமணம் ஆன எந்த புகைப்படங்களும் வெளியிடவில்லை. அதனால் உண்மையில் இவருக்கு திருமணம் ஆகி இருக்கா, இல்லை இனிமேல் தான் செய்யப் போகிறாரா என்பதுதான் சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கும் கேள்வியை எழுப்பி வருகிறது.