வேற கதையே கிடைக்கலையா ப்ரோ.. விஜய்யை தாளிக்கும் ரசிகர்கள்

தளபதி 69 விஜய்-யின் கடைசி படமாக உள்ளது. இந்த படத்துக்கு பிறகு, தொடர்ந்து இனி அரசியலில் பயணித்து மாற்றத்தை உருவாக்க இருக்கிறார் தளபதி விஜய்.

இப்படி பட்ட சூழ்நிலையில், படத்தை வேகமாக முடிக்க சொல்லி எச்.வினோதிடம் கூறியுள்ளார். அவருக்கு அரசியலில் ஏகப்பட்ட பொறுப்புகள் உள்ளதால், வேகமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு, முழு நேர அரசியல்வாதியாக உருமாற இருக்கிறார்.

இப்படி இருக்க, படத்தை பற்றி தற்போது ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. பல வாரங்களாகவே, தளபதி 69 படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்று கூறி வந்தனர்.

அதை படக்குழுவினர் உறுதிசெயாமலே வைத்திருந்த நிலையில், தற்போது அது ஒரு Official Remake பிலிம் என்று அப்டேட் கொடுத்துள்ளார்கள். இது தான் தற்போது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேற கதையே கிடைக்கவில்லையா?

தெலுங்கு நடிகர் பாலக்ரிஷ்ணாவின் படத்தை தான் ரீமேக் செய்துள்ளார்கள். பொதுவாக பாலகிருஷ்ணா தெலுங்கு திரையுலகில், பெரிய ஆளாக இருந்தாலும், நம் தமிழ் மக்கள் அவரை ட்ரோல் மெட்டீரியலாக தான் பார்க்கிறார்கள்.

அப்பேர்பட்டவர் படத்தில் போய் ஏன் நடிக்கிறீர்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

அதுவும் தற்போது ரீமேக் என்று கூறிவிட்ட நிலையில், நிச்சயம் ரசிகர்கள், நெட்டிசன்கள் என்று எல்லோரும் அந்த படத்தை பார்க்க படையெடுத்து கிளம்புவார்கள்.

அப்படி பார்த்துவிட்டு, தியேட்டரில் படத்தை பார்க்கும்போது compare செய்வார்கள். இதனால், தளபதி மற்ற நடிகர்களின் ரசிகர்களால் ரசிக்க முடியாமல் போய்விடும். மேலும் இது வசூலிலும் பாதிப்பு ஏற்படுத்து நிறைய வாய்ப்புகள் உள்ளது.

இதை தொடர்ந்து தான் ரசிகர்கள், வேற கதையே கிடைக்கவில்லையா? ஏன் தெலுங்கு படம்? அதுவும் இவரோட படம்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

எச். வினோத்தின் ரீமேக் படத்தில் நடிப்பதற்கு பதிலாக ஆர்.ஜெ.பாலாஜி-க்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால், நிச்சயம் அவர் ஒரு Fresh Content-டை கொண்டு வந்திருப்பார் என்றும் விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Comment