விஜய்யை பின்னுக்கு தள்ளி முந்திய தனுஷ்.. உலக அளவில் போனதால் பரிதாப நிலையில் இளைய தளபதி

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. அந்தளவிற்கு தளபதி விஜயின் படங்கள் வசூலை வாரி குவித்து வருகின்றது

விஜய்க்கு அடுத்தபடியாக பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தனுஷ் அதாவது விஜய் நடிக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் இடம் பெற்றாலும் அவருக்கு கேரளா மற்றும் வெளிநாடுகள் உட்பட ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர். அதுமட்டும் இன்றி  விஜய்க்கு சர்வதேச நடிகர் விருது கூட கிடைத்துள்ளது.

தனுஷ் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது ஹிந்தியில் அட்ராங்கி ரே ஹாலிவுட்டில் தி கிரேட் மேன் போன்ற உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதனால் தனுஷ் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படம் உலக அளவில் பிரபலம் அடைந்ததால் தனுஷின் நடிப்பிற்கு பெரிய அளவில் பாராட்டு கிடைத்தது. மேலும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கூட தனுஷுடன் நடிப்பது தங்களுக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் ஒரு சிறந்த நடிகர் கூட நடித்த அனுபவம் தங்களுக்கு கிடைத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

தற்போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதுவரைக்கும் தளபதி விஜய் தான் தமிழ் சினிமாவில் முதலிடத்தில் பிடித்து இருந்தார். ஆனால் தற்போது விஜய் 2 வது இடத்திலும், தனுஷ் 1வது இடத்திலும் இடம் பெற்றுள்ளார்.

தற்போது தனுசுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் உள்ளன. வாத்தி, கேப்டன் மில்லர், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் தனுஷ் நடித்து வருகிறார். அதனால் அடுத்தடுத்து தனுஷுக்கு வெற்றி படங்களின் வரிசை நீண்டுகொண்டே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.