பிரம்மாண்ட கூட்டணியோடு களமிறங்கும் விஜய்.. அதிர போகும் ஜனவரி மாநாடு

Vijay-Tvk: விஜய்யின் அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றுமே கவனிக்கப்பட்டு வருகிறது. அதே போல் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கி இருக்கிறது.

இது மூத்த அரசியல் கட்சிகளுக்கு தலைவலியாக மாறிப் போயிருக்கிறது. அதன்படி அடுத்த மாதம் மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்துவதற்கு தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடந்த மாநாடு தேசிய அளவில் கவனம் பெற்றது. அதை அடுத்து இரண்டாவதாக நடக்க போகும் மாநாட்டில் முக்கிய கட்சி தலைவர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிர போகும் ஜனவரி மாநாடு

அது போல் முந்தைய மாநாட்டிற்கு கடும் விமர்சனங்கள் வந்தது. அது எதுவும் இல்லாத படி சிறப்பான ஏற்பாடுகளும் மதுரையில் செய்யப்பட்டு வருகிறது. 5 நாட்களுக்கு முன்பிருந்தே மாநாட்டு திடல் திருவிழா போல் கலை கட்டப் போகிறது என்கின்றனர் கட்சியினர்.

அது மட்டும் இன்றி ஜனவரி மாதம் நடக்கப் போகும் மாநாடு தான் ஹைலைட். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களுடன் விஜய் கைகோர்த்து அறிவிப்பை வெளியிடுவார். அதோடு இல்லாமல் மக்களுக்கான நலத்திட்டங்கள் என்னென்ன, ஆட்சி அமைத்தால் என்ன செய்வார்கள் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது கூட்டணி உறுதியென தெரிகிறது. அதே சமயம் ஆளும் கட்சி இப்போதிருந்தே தங்கள் கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும் என்ற வேலையில் தீவிரமாக இருக்கிறது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரும் கட்சி ஒன்று விஜயுடன் கைகோர்க்க போவதாக உறுதியான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ ஜனவரி மாதம் அரசியல் வட்டாரம் அதிரும் வகையில் சம்பவம் நடக்கப்போகிறது என்பது மட்டும் உறுதி.