Vijay-Jana Nayagan: விஜய்யின் கடைசி படமாக உருவாகி வரும் ஜனநாயகன் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகிறது. அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளியாகிறது.
இந்த போட்டியை தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் தற்போது நிலவரப்படி பராசக்தி பொங்கலுக்கு வெளிவருமா என்பது கேள்விக்குறி தான்.
ஏனென்றால் சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினார்கள். இதற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் அமலாக்க துறை சோதனைக்கு தடை விதிக்கப்பட்டது.
விஜய்யின் அடுத்த அஸ்திரம் என்ன.?
ஆனாலும் பராசக்தி பட ரிலீஸ் தள்ளி போகும் என தெரிகிறது. அதேபோல் விஜய் கூட இந்த அமலாக்கத்துறை சோதனை விவாகரத்தில் கருத்து தெரிவித்து அறிக்கை விட்டிருந்தார்.
மேலோட்டமாக பார்த்தால் இது தமிழக அரசுக்கு எதிராக இருக்கும். ஆனால் பராசக்தி ரிலீஸ் தள்ளி போக வேண்டும் என்ற காரணமும் மறைமுகமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.
அப்படி என்றால் விஜய் பயப்படுகிறாரா என்ற கேள்வியும் இருக்கிறது. உண்மையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்கள் மோதும் போது வசூலில் பெரும் பின்னடைவு ஏற்படும்.
அதிலும் விஜய்க்கு இது கடைசி படம். அப்படி இருக்கும் போது ஒரு மாஸ் ஹீரோவாக இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வேண்டும் என்பது அவருடைய திட்டம்.
இப்படியாக அவருடைய அறிக்கைக்கு பின்னால் சில காரணங்கள் இருக்கிறது என வலைப்பேச்சு அந்தணன் கூட குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
அதை விசாரித்த நீதிபதிகள் அமலாக்க துறையினர் சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளனர். அதை அடுத்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இப்படியாக இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு பரபரப்பை கிளப்பி வருகிறது. இது பராசக்திக்கு பாதகமாக அமையுமா என்பது அடுத்தடுத்த நகர்வுகள் மூலம் தெரிய வரும்.