இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகரான விஜய் அவர்கள் சினிமா மட்டுமின்றி அவ்வப்போது அரசியலிலும் ஈடுபடுவார். அவர் சினிமா துறையில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்த ரசிகர்களின் நெஞ்சில் குடியிருப்பவர் ஆவார்.
இரண்டு மாதங்களாக விஜய் வழக்கு பற்றி செய்திகளை வைரலாக பரவி வருகிறது அந்த வழக்கு பலர் ஆதரவும் ,எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட “ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ” என்ற சொகுசு காரை ரூபாய் 1.88 கோடி செலவில் வாங்கியுள்ளார்.
வட்டார போக்குவரத்து பதிவு செய்யமை மற்றும் அந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாமல் ஆகிய இரண்டு காரணங்களுக்காக வணிகவரித்துறை விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் விதமாக வரி விலக்கு கோரி விஜய் தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிபதி நடிகர் விஜய் மனுவை தள்ளுபடி செய்து ,மேலும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்தார்.

அந்த அபராதத் தொகையை முதல்வர் covid19 செலுத்துமாறு கூறியுள்ளார். மேலும் நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் அவர்கள் “ரியல் ஹீரோவாக இருங்கள்”. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டியது தவிர அதை நன்கொடை அல்ல என்று காட்டமாக கூறியுள்ளார்.
மேலும், வரி ஏய்ப்பு செய்வது தேசத்துரோகம் என்றும் அவர் கூறி தீர்ப்பளித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் வழக்கறிஞர் அளித்த பேட்டியில் வரி விளக்குதான் கேட்டிருந்தோம். இதில் வரி ஏய்ப்பு என்ற வாதத்திற்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் அதைத் தொடர்ந்து மேல் முறையீடு செய்து உள்ளனர், விஜய் பற்றிய நீதிபதி கூறிய கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.
வரிவிலக்கு தொடர்பாக 500க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கும் இந்த சூழ்நிலையில் தளபதி விஜயின் வழக்கில் மட்டும் தனி கவனம் செலுத்தி காட்டமான கருத்துக்களை கூறியது ஏன்.? என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அறிவுரை கூறியுள்ளார். வழக்குகளை கையிலெடுக்கும் போது நீதிபதிகள் கட்டுப்பாடுகளை மீறுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.