தளபதி விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து நேரடியாக இறக்குமதி செய்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை வாங்கினார். இந்த காருக்கு வரி கட்டவில்லை என்ற பஞ்சாயத்து தான் நேற்று விஜய்யின் பெயரைக் கெடுத்தது.
கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் கழித்து மீண்டும் இந்த வழக்கு வெளியில் வந்து விஜய்க்காக பெயருக்கு களங்கம் உண்டாக்கியுள்ளது. ஆனால் இதற்கான உண்மை காரணம் என்ன என்பது தெரியாமலேயே பலரும் விஜய்யை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் அவரை கேலி செய்து ட்ரண்ட் செய்தனர்.
எப்படா விஜய்யை அசிங்கப்படுத்தலாம் என காத்திருப்பவர்களுக்கு நேத்து ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததால் வெகு விமர்சையாக கொண்டாடி விட்டனர். ஆனால் விஜய் 2012 ஆம் ஆண்டு வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு அப்போதே வரி கட்டி விட்டார்.
அப்புறம் ஏன் இந்த வரி பஞ்சாயத்து. ஒரு காரை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கி வேறு ஒரு மாநிலத்தில் ரிஜிஸ்டர் செய்ய நுழைவு வரி விதிக்கப்படும். அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கும் இந்த வரி விதிமுறை அமலில் இருந்துள்ளது.
அதாவது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ஒரு வரி, அதேசமயம் அதை இங்கே ரிஜிஸ்டர் செய்வதற்கு ஒரு வரி என பணக்காரர்களுக்கு இரண்டு வரி விதிமுறை இருந்துள்ளது. இதில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ஏற்கனவே நுழைவு வரி கட்டப்பட்டதால் மீண்டும் எதற்கு நுழைவு வரி? என்பது பணக்காரர்களின் கேள்வியாக முன் வைத்து வழக்கு தொடரப்பட்டது.
அதன் பிறகு பெரிய அளவில் யாரும் சொகுசு கார்கள் வாங்காததால் அந்த வழக்கு அப்படியே நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சொகுசு கார்களை வாங்கியவர்கள் பக்கத்திலிருந்து அவர்கள் நியாயத்தை பேச ஆட்கள் யாரும் இல்லாததால் அது நீதிமன்றத்திற்கு சாதகமாக அமைந்துவிட்டதாம்.
இந்நிலையில் விஜய் யாரையும் ஏமாற்றவில்லை எனவும், அந்த வழக்கின் முடிவு வரும்வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தான் அந்த குறிப்பிட்ட வரியை மட்டும் நிலுவையில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். இது புரியாமல் விஜய்யை பலரும் நேற்று அசிங்கப்படுத்தியது நினைவு கூரத்தக்கது. நீதிமன்றம் வழக்கை பற்றிய விவரத்தை சொல்லாமல் விஜய்யை ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது எனக்கூறி ஒரு லட்சம் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் நிவாரண நிதி தொகை வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.
