அஜித்துக்கே டஃப் கொடுக்கும் மக்கள் செல்வன்.. 12 கிலோ குறைத்து பிட்டாக மாறிய விஜய் சேதுபதியின் வைரல் போட்டோ

Actor Vijay Sethupath New Look: பிசாசு 2 படத்தில் சிறிய வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி இப்போது மிஷ்கின் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் விடாமுயற்சி படத்திற்காக அஜித் செம ஸ்லிம்மான புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இப்போது அஜித்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதி அதிரடியாக 12 கிலோ உடல் எடையை குறைத்து பிட்டாக மாறி இருக்கும் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு நாள் வில்லனாக கோலிவுட் முதல் பாலிவுட் வரை ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த விஜய் சேதுபதி, இப்போது மிஷ்கின் இயக்கும் திரைப்படத்தில் மறுபடியும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி செல்லும் ரயிலில் குண்டு வெடிக்கப் போகிறது, இதை அவர் எப்படி சமாளித்து குண்டை வெடிக்க விடாமல் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

அதிரடியாக 12 கிலோ உடல் எடையை குறைத்த விஜய் சேதுபதி

இந்த படத்திற்காகவே அவர் தன்னுடைய உடல் எடையை ஸ்லிம்மாக்கி செம ஸ்மார்ட் ஆக மாறி இருக்கிறார். இந்த படத்தை கலைப்புலி தாமு தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் துவங்கப்பட்டிருக்கிறது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது. இதில் விஜய் சேதுபதி முன்பை விட முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறார். இந்த படத்தில் மட்டுமல்ல இனி நடிக்கும் படங்களில் விஜய் சேதுபதியை ஹீரோவாக தான் பார்க்க போகிறோம்.

பிட்டாக மாறிய விஜய் சேதுபதி

vijay-sethupathi-new-look
vijay-sethupathi-new-look