தனக்கான பாலிவுட் ஜோடியை தரமாக தேர்வு செய்த விஜய் சேதுபதி.. மெர்ரி கிறிஸ்மஸ் ட்ரண்டாகும் போஸ்டர்

விஜய் சேதுபதி ஆரம்பத்தில் திரையில் இருப்பதே தெரியாத போன்று அல்லது ஹீரோக்களின் நண்பன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் தன்னுடைய கடின உழைப்பால் இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த அளவுக்கு அவரது வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது.

இந்த சூழலில் தமிழ் படங்களை காட்டிலும் பாலிவுடில் விஜய் சேதுபதி பிஸியாக உள்ளார். அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அந்த வகையில் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு வெளியாக இருந்த இந்த படம் சில காரணங்களினால் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் இன்று படக்குழு மெர்ரி கிறிஸ்மஸ் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அந்தப் போஸ்டரில் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் கையில் கோப்பை உடன் மோதிக்கொள்வது போன்று வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரை விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளனர். இப்போது இந்த போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

மேலும் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தை இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியிட முடிவு செய்தோம். ஆனால் சில காரணங்களால் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மிக விரைவில் திரையரங்குகளில் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தை பார்க்கலாம் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மெர்ரி கிறிஸ்மஸ் படம் அடுத்த ஆண்டு 2023 இல் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியாக உள்ளது. மேலும் இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது. ஆகையால் அடுத்த ஆண்டு ஜவான், மெர்ரி கிறிஸ்மஸ் என விஜய் சேதுபதியின் பாலிவுட் படங்கள் அடுத்தடுத்த வெளியாகும்.