சம்பளத்தை மூன்று மடங்காக ஏத்திய விஜய் சேதுபதி.. அடுத்த 8 படத்துக்கும் இதுதான் பில்லு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி(vijay sethupathi) மாஸ்டர் படத்திற்கு பிறகு தன்னுடைய சம்பளத்தை ஏற்றி விட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இந்த அளவுக்கு ஏற்றவாறு என்பதுதான் தெரியாமல் போய்விட்டது. ஹீரோவாக நடிக்க ஒரு சம்பளம், வில்லனாக நடிக்க ஒரு சம்பளம், குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஒரு சம்பளம் என சம்பளத்திற்கு புது வரையறையை எழுதி வருகிறார்.

மாஸ்டர் படத்திலேயே அவருக்கு 10 கோடி சம்பளம் கொடுத்தாக செய்திகள் வெளியானது. ஹீரோவாக மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவருக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி விஜய் சேதுபதியை வேறு ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது.

மாஸ்டர் படத்திற்கு முன்பு வரை விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த பல படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகராக மாறியிருக்கிறார்.

அந்தவகையில் அடுத்ததாக அவர் நடிக்கும் 8 படங்களுக்கும் இது தான் சம்பளம் என தயாரிப்பாளர்களிடம் பில்லை நீட்டி வருகிறாராம். அதில் அடுத்ததாக ஹீரோவாக அவர் நடிக்கும் ஆறு படங்களுக்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம்.

அதேபோல் தெலுங்கில் ஒரு படத்தில் வில்லனாக நடித்த 20 கோடி சம்பளம் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக 3 சீசன்களையும் சேர்த்து 54 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அந்த வெப்சீரிஸில் ஹீரோவாக நடிக்கும் நடிகரை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டு தான் கொடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

vijay-sethupathi-cinemapettai-01
vijay-sethupathi-cinemapettai-01