Vijay Serthupathi: விஜய் சேதுபதி அடிமட்டத்திலிருந்து சினிமாவிற்கு வந்ததால் அதனுடைய கஷ்டங்கள் என்னவென்று இவருக்கு நன்றாகவே தெரியும். அதனாலயே இவரை போல் கஷ்டப்படும் பலருக்கும் வாய்ப்பு கொடுத்து அவர்களை ஓரளவுக்கு சினிமாவில் தூக்கிக் கொண்டு வருகிறார். அப்படித்தான் இவருடைய நெருங்கிய நண்பர்கள் பல பேருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.
அப்படி இவர் தூக்கி விட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் ஒரு நடிகருக்கு இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஏதாவது ஒரு கேரக்டரை கண்டிப்பாக கொடுத்து விடுவார். பொதுவாகவே இவருடைய மனசு பறந்த மனசுதான் என்றே சொல்லலாம். அதற்கு காரணம் ரசிகர்களிடமும் சரி, சக நடிகர்களிடமும் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஈசியாக பழகி விடுவார்.
அப்படி இவர் கண் முன் வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்த ஒருவரை தற்போது வரை அவரை கைவிடாமல் பாதுகாத்து வருகிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் அருள்தாஸ். இவர் விஜய் சேதுபதி நடித்த முக்கால்வாசி படங்களில் கூட்டணி போட்டு நடித்திருக்கிறார். சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதியின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர் இன்னும் பிரபலமாக இல்லாட்டாலும் இவருக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு அவருக்கான கேரக்டரில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட பெயர் தெரியாமலேயே 50 படத்திற்கும் மேல் இவருடைய பயணம் சினிமாவில் தொடர்ந்து கொண்டே வருகிறது.
அப்படி விஜய் சேதுபதி உடன் நடித்த முக்கியமான படத்தின் தொகுப்பை பார்க்கலாம். அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் மொக்கையன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். அடுத்து தர்மத்தின் தலைவன் படத்தில் விஜய் சேதுபதியின் அண்ணனாக நடித்தார்.
இதனைத் தொடர்ந்து சிந்துபாத், இடம் பொருள் ஏவல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் இந்த வருடம் வெளிவந்த ராவண கூட்டம், பொம்மை நாயகி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பல படங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் நடிக்கிறார். இவருக்கு எப்பொழுதெல்லாம் வாய்ப்புகள் இல்லையோ அப்பொழுது விஜய் சேதுபதி கை கொடுத்து தூக்கி விடுகிறார்.