OTTயில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் புதிய படம்.. நாங்க என்ன பாஸ் பண்றது

தனது எதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய சேதுபதி. தற்போது கைவசம் அதிக படங்களை வைத்துள்ள ஒரே நடிகரும் இவர்தான். பெரும்பாலும் கிராமம் சார்ந்த படங்களில் இவரது நடிப்பு பலரது பாராட்டை பெற்றுள்ளது. உதாரணமாக இவரின் முதல் படமான தென்மேற்கு பருவக்காற்று அதனைத் தொடர்ந்து தர்மதுரை, கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களை கூறலாம்.

தற்போது அந்த வரிசையில் கடைசி விவசாயி படமும் இணைந்துள்ளது. காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் இப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிட்டத்தட்ட இப்படம் முழுவதுமாக தயாராகி சில ஆண்டுகள் வெளியாகாமல் கிடப்பில் இருந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மேலும் தாமதமானது. எனவே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம்.

சோனி லைவ் தளத்தில் ரிலிஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 30 ஆம் தேதி கடைசி விவசாயி திரைப்படம் ரிலீஸாகும் என தேதியுடன் அறிவித்துள்ளனர்.