விலை போகாமல் காத்துக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதி.. குண்டக்க மண்டக்க செய்யும் வியாபாரம்

ஒரு படம் வெளியாகிறது என்றால் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப விலையை நிர்ணயிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பேராசைப்பட்டு அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப் பார்த்தால் போட்ட முதல் கூட கிடைக்காமல் போய்விடும். அப்படி ஒரு நிலைதான் தற்போது விஜய் சேதுபதியின் படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 33 கோடி தான். ஆனால் இந்த படத்தை வியாபாரம் செய்ய தயாரிப்பு நிறுவனம் பல கோடிகளை நிர்ணயித்துள்ளது.

நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. படம் ரிலீசாகப்போகும் தேதியையும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டது. அது மட்டுமல்லாமல் படத்தின் ட்ரெய்லர், பாட்டுக்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.

இதனால் தயாரிப்பாளர்கள் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் படத்தை பல கோடிகளுக்கு வியாபாரம் செய்ய நினைத்துள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ஒரு பெரிய விலையாக பல கோடிகளை சொல்லி இருக்கின்றனர். இவ்வளவு விலையை கேட்டு படத்தை வாங்க முன் வந்த சிலரும் தயங்கி வருகின்றனர்.

மேலும் இவ்வளவு கோடிகளை கொடுத்து இந்த படத்தை வாங்குவதற்கு யாரும் தற்போது தயாராக இல்லை. அதனால் படம் இன்னும் வியாபாரம் செய்யப்படாமல் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு முன் சில தோல்விப் படங்களைக் கொடுத்த விஜய் சேதுபதியும், நயன்தாராவும் இந்த படத்தைதான் பெரிதும் நம்பி இருக்கின்றனர்.

அப்படியிருக்கையில் படம் இன்னும் வியாபாரம் செய்யப்படாமல் அது படத்திற்கு சிறு பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு பின்னர் உள்ளதும் போச்சே என்ற நிலையில் நயன்தாரா இருக்கப் போகிறார் என்று திரையுலகில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.