வியாபாரம் ஆகாத விஜய் சேதுபதி.. தயாரிப்பாளர்கள் தெரித்து ஓடும் கொடுமை.!

விஜய் சேதுபதி தற்போது உள்ள நடிகர்களில் ஒருவராக ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார். இவரின் படங்களுக்கு எப்பொழுதுமே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட இவர் அனைத்து மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். அதனால் இவருடைய மார்க்கெட் ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டிருக்கிறது.

அதற்கேற்ற மாதிரி இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் சம்பளத்தை அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்களும் வேறு வழி இல்லாமல் ஓகே சொல்வதால் இவரது சம்பளம் தற்போது அதிகமாகி விட்டது. இதனால் பெரிய உச்சாணி கொம்புக்கு போய்விட்டார் என்றே சொல்லலாம்.

ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல தற்போது இவர் படத்திற்கான வியாபாரம் ரொம்ப மந்தமாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனாலும் சில படங்களை கையில் வைத்திருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் இப்பொழுது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.

ஆனால் தற்போது விஜய் சேதுபதி நடித்து ஓடாத சங்கத்தமிழன் படத்தின் சேட்டிலைட் உரிமை 14 கோடிக்கு வாங்கப்பட்டது. அதுபோல இவர் நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்தை 3 கோடிக்கு கூட வாங்க ஆள் இல்லாமல் இவர் நிலைமை இருக்கிறது.

அதனால் தற்போது என்னதான் இவர் பிஸியாக இருந்தாலும் மார்க்கெட் இல்லாமல் தான் இருக்கிறார். இதனால் இவரை பார்த்து தயாரிப்பாளர்கள் எல்லாரும் தெரிந்து ஓடுகின்றனர். மேலும் சுந்தர் சி அரண்மனை 4 படத்தில் இவரை ஹீரோவாக நடிப்பதற்கு கேட்டார். ஆனால் இவர் அந்த படத்தில் அதிகமான சம்பளத்தை கேட்டிருக்கிறார். இதை கேட்ட தயாரிப்பாளர் இவர் கேட்ட சம்பளத்தை கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்.

இதே மாதிரி தொடர்ந்து இவர் நிலைமை போய்க் கொண்டிருந்தால் இவர் கூடிய சீக்கிரமே சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்படுவார். அதே நேரத்தில் இவருடைய நிலைமையை இவர் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொண்டால் இவரை தேடி நல்ல வாய்ப்புகள் வரும். இதை தக்க வைத்துக் கொள்வது இவர் கையில் தான் இருக்கிறது.