விஜய் சேதுபதி நாற்காலியை தூக்கிய ஹீரோ.. உல்டாவாக தம்பி போனதும் காலியான திண்ணையை பிடித்த அண்ணன்

ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு திரை உலகிற்கு நுழைந்த இவர், இன்று சினிமாவில் முன்னணி நடிகராக இவருக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் தற்போது ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரின் ஸ்பெஷல் ஒரு வருடத்திற்குள் 12, 13 படங்கள் அசால்டாக நடிப்பது தான்.

இவர் எப்பொழுதுமே ஏராளமான திரைப்படங்களை கைவசம் தக்க வைத்துக் கொள்வார். அதே மாதிரி அந்த படங்களில் இவருடைய நடிப்பு மிகவும் எதார்த்தமாகவும், ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்படியாகவும் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். அப்படிப்பட்ட இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது எந்தவித ஆச்சரியமும் இல்லை.

எந்தப் படங்களில் பார்த்தாலும் இவர் நடிகர், வில்லன், கெஸ்ட் ரோல் என்று ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி, விஜய் சேதுபதி தானா என்ற ஒரு பெயரை எடுத்து விட்டார். இப்படி திரும்பின இடமெல்லாம் இவர் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்தார். ஆனால் இப்பொழுது அந்த நிலைமை சற்று மாறிக்கொண்டே வருகிறது என்று சொல்லலாம்.

ஏனென்றால் இப்பொழுது இவர் நடிகராக நடிக்கும் படங்கள் அந்த அளவிற்கு எடுபடவில்லை. இவருடைய மார்க்கெட்டுக்கு சரிவு ஏற்பட்டு விட்டது. இதனால் விஜய் சேதுபதி சற்று தொய்வடைந்துவிட்டார். எப்பொழுதும் இவர் கையில் அதிக படங்கள் இருக்கும் என்று மிதப்பில் இருந்த இவருக்கு போட்டியாக ராகவா லாரன்ஸ் அந்த இடத்தை பிடித்து விட்டார்.

அண்ணன் எப்போ நகர்வான் திண்ணை எப்போ காலியாகும் என சொல்வார்களே அதுபோல இப்பொழுது லாரன்ஸ் கையில் 10 படங்களை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வருகிறார். இந்த மனுஷன் சும்மாவே சலங்கை இல்லாம ஆடுவாரு. அதாவது புதுசா கதையை யோசிக்காமலேயே இருக்க கதையை வைத்து வெற்றி பெறக்கூடியவர்.

அப்படிப்பட்ட இவருக்கு சந்திரமுகி 2, ருத்ரன், அதிகாரம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு இவரிடம் படங்கள் கொட்டிக் கிடக்கு. அதிலும் இன்னும் இரண்டு மாதங்களில் ருத்ரன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.