ராம் ஜானுவை மறுபடியும் பார்க்க ரெடியா மக்களே.. 96 பார்ட் 2 லேட்டஸ்ட் அப்டேட்

96 Part-2: விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு 96 படம் வெளியானது. பிரேம்குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தது.

பள்ளி மாணவர்கள் 20 வருடங்களுக்கு பிறகு சந்தித்துக் கொள்ளும் நிகழ்வு தான் படத்தின் மையக்கரு. அதில் விஜய் சேதுபதி திரிஷாவின் நிறைவேறாத காதல் ஆடியன்ஸை கலங்க வைத்தது. இதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கக் கூடாதா என ரசிகர்கள் ஏங்கும் அளவுக்கு ஒரு நல்ல ஃபீல் குட் படமாக அது இருந்தது. அதனாலேயே இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் பல வருடங்களாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் வரும் 96 ராம் ஜானு

அதன் பலனாக மீண்டும் இந்த கூட்டணி இணைய இருக்கிறது. டான் பிக்சர்ஸ் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறது. 96 படத்திற்கு பிறகு பிரேம்குமார் சமீபத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன் படத்தை இயக்கியிருந்தார்.

அப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதை அடுத்து தற்போது 96 இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளை அவர் முடித்து விட்டாராம். விரைவில் அடுத்த கட்ட வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெகு சீக்கிரம் எதிர்பார்க்கலாம். ஆனால் இதில் ராம் ஜானுவின் கதை எப்படி நகரும் என்பது பெரும் சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. இருந்தாலும் ஆறு வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடியை மீண்டும் காண்பதில் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Leave a Comment