தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பு ,இயக்கம், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர் . இவருடைய எதார்த்தமான நடிப்பு மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது.
ஆரம்ப நிலையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் வந்து தனது நடிப்பை துவங்கினார். வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல ,சுந்தரபாண்டியன் ,புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். எந்த ஒரு கதையாக இருந்தாலும் அந்த கதையில் வரும் கதாபாத்திரமாகவே மாறி விடும் தன்மை விஜய்சேதுபதிக்கு உள்ளது.
அதுவே அவருடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் திரைப்படங்களில் மிரட்டியிருக்கிறார் .விஜய்சேதுபதி கமலஹாசன் ,விக்ரம் போன்ற நடிகர்கள் வரிசையில் அனைத்து வேடங்களுக்கும் பொருத்தமானவர் விஜய்சேதுபதி என்று ரசிகர் பட்டாளம் கூறுகிறது.

சூது கவ்வும், தர்மதுரை, விக்ரம்வேதா ,ஜூங்கா ,டீலக்ஸ், பேட்ட,சீதகாதி போன்ற பல திரைப்படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள” துக்ளக் தர்பார் “நேரடியாக தொலைக்காட்சியில் வெளிவர போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கொரோனாவால் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் திரைப்படங்கள் ஓட்டு டீயில் வெளியாகும் நிலையில் துக்ளக் தர்பார் படத்தை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது வரும் விநாயகர் சதுர்த்தியன்று சன் டிவியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நாளில் நெட்பிளிக்ஸ் இணைய தளத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துக்ளக் திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியிருக்கிறார் விஜய்சேதுபதி ,ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ,பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொலைக்காட்சியில் வெளியிடப்படும் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.