தற்சமயம் இந்திய சினிமாவில் அதிக டிமாண்ட் உள்ள நடிகராக மாறி உள்ளார் விஜய் சேதுபதி. இவ்வளவுக்கும் காரணம் விஜய்யின் மாஸ்டர் படம் தான் என்றால் நம்ப முடிகிறதா. விஜய்யின் கேரக்டரை குறைத்து பேச வேண்டும் என்பதற்காகவே விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை தூக்கி பேசி அவரை ஹீரோவாக்கி விட்டனர்.
உண்மையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி நடித்த பவானி கேரக்டர் சாதாரண ஒரு வில்லன் கதாபாத்திரம் தான். விஜய் சேதுபதியும் சும்மா சொல்லக்கூடாது, சாதாரண கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தனக்கு ஏற்ற கதாபாத்திரமாக எப்படி மாற்றவேண்டும் என்ற வித்தை தெரிந்தவர்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பண்ணா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அங்கேயும் வசூலை குவிக்க தற்போது தெலுங்கு முன்னணி நடிகர்களும் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இப்படித் திரும்பிய பக்கமெல்லாம் விஜய் சேதுபதியின் குரல் ஒலித்துக் கொண்டிருக்க பாலிவுட் சினிமாவும் இவரை ஏன் சும்மா விட வேண்டும் என அவர்களது பங்குக்கு ஒரு இரண்டு படங்களை தூக்கி கொடுத்தனர். அது மட்டுமில்லாமல் ஒரு வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்த ஊரடங்கு சமயத்தில் மட்டும் கிட்டத்தட்ட 26 படங்களுக்கு மேல் அட்வான்ஸ் வாங்கி குவித்திருக்கிறாராம் விஜய் சேதுபதி. அச்சமயம் விஜய் சேதுபதியை ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு முறையான சம்பளம் பேசி வருகிறார் என்பதும் கூடுதல் தகவல். விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு கூட 10 கோடி சம்பளம் பேசினாராம்.
அதை தொடர்ந்து தெலுங்கில் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்ற சம்பள முறையை கையாண்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் மூன்று பாகங்களாக உருவாகும் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதற்காக மொத்தமாக 54 கோடி ரூபாய் சம்பளம் பேசி வாங்கியதாகவும் கூறுகின்றனர்.
