Actor Vijay Sethupathi: தன் திறமையால், தமிழ் சினிமாவில் மாபெரும் இயக்குனராய் வலம் வருபவர் தான் அட்லீ. தன் இயக்கத்திற்கு சிறு இடைவெளி விட்ட இவர் தற்பொழுது பாலிவுட் பக்கம் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் பட ஹீரோவை கண்டு மிரண்டு போன விஜய் சேதுபதி பற்றிய தகவலை இங்கு காண்போம்.
மாஸ்டர் படம் வெற்றிக்குப் பிறகு இவரின் வில்லன் கதாபாத்திரம் பெரிதளவு பேசப்பட்டதால், அடுத்த அடுத்த படங்களில் நெகட்டிவ் ரோலில் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. அவ்வாறு அட்லீ இயக்கத்தில் ஆக்சன் கலந்த திரில்லர் படமான ஜவான் படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
மேலும் இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது. பல எதிர்பார்ப்புகளை கொண்டு வரும் இப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்ற ஆவலில் இவரின் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் இவர் தன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாருக்கான் இடம் இப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இப்படத்தில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் என்ன என்று கேள்வி கேட்ட போது ஷாருக்கான், வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதியே என பதில் அளித்துள்ளார்.
படப்பிடிப்பின் போது இவரின் கூலான நடிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த பாராட்டியினை கொண்டு விஜய் சேதுபதி மிரண்டு போனாராம். ஒரு பிரபல மூத்த நடிகரான ஷாருக்கான் இடம் இருந்து இது போன்ற பாராட்டுகளை பெறுவது என்பது மிகுந்த சந்தோஷத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஷாருக்கான் தற்பொழுது தமிழில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் விஜய் சேதுபதி தான் எனவும் கூறியது இவரை தலைகால் புரியாமல் செய்து வருகிறது. இதை குறித்து பார்க்கையில் இவரின் நடிப்பு படத்தில் வேற லெவலில் இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி ஹாலிவுட் படங்களையும் மேற்கொள்வார் என்பது திட்டவட்டமாகி உள்ளது.