50வது படத்தை தந்திரமாக லாக் செய்த விஜய் சேதுபதி.. தூக்கி விட்ட இயக்குனரை கழட்டிவிட்ட சோகம்

விஜய் சேதுபதி சினிமாவில் நடிக்க வந்த பொழுது கிடைத்த சில வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து தற்போது அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார். அத்துடன் ஏதாவது சில காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று தான் வாய்ப்பை தேடி அலைந்தார். அதன் பின் இவருடைய விடாமுயற்சியால் கிடைத்த வாய்ப்பை அனைத்தையும் பயன்படுத்தி தற்போது புகழின் உச்சியை அடைந்திருக்கிறார்.

அத்துடன் இவருடைய மிகப்பெரிய பிளஸ் ஒரு வருடத்திற்கு எக்கச்சக்கமாக 9, 10 படங்களில் கமிட் ஆகி நடிப்பதுதான். ஒரு மாதத்திற்கு ஒரு படம் என்று நடித்து கொடுப்பதில் மிகச்சிறந்த கெட்டிக்காரர். மேலும் அந்த படத்திற்கு ஏற்ற மாதிரி தன்னுடைய உடல் எடையை கூற்றியும் மறுபடியும் குறைத்து ஹீரோவாகவும் இவருடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டு நடிப்பார். அப்படி இவரைப் பற்றி நிறைய விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அதனால் தான் என்னமோ தற்போது இவர் ஐம்பதாவது படத்தை நெருங்கி விட்டார். இப்பொழுது தான் சினிமாவிற்கு நுழைந்த மாதிரி இருக்கு அதுக்குள்ளேயே இவ்வளவு பெரிய மைல் கல்லை அடையப் போகிறார். அதற்கெல்லாம் காரணம் நான் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் வில்லனாகவும் சரி, குணச்சித்திர கேரக்டராகவும் சரி எந்த மாதிரியான கேரக்டர் இருந்தாலும் அதற்குப் பக்காவாக நடித்து இந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

அதிலும் இவருடைய ஐம்பதாவது படம் ரொம்பவே ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அதற்காக இவருக்கு வாழ்க்கை கொடுத்து சினிமா கேரியரில் இவரை தூக்கிவிட்ட சீனு ராமசாமிக்கு நடித்துக் கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தார். மேலும் இப்படத்தை எஸ்.கலைப்புலி தானு தயாரிக்க இருந்தது. இதனால் இயக்குனர் இவர் மேல் பெரிய நம்பிக்கையுடன் கதையை ரெடி பண்ணி காத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் தற்போது அவரை கழட்டி விட்டு வேறு இயக்குனர் கூட்டணி வைக்க இருக்கிறார். அதற்கு காரணம் சீனு ராமசாமி இயக்கத்தில் படம் நடித்தால் ஏதாவது தேவையில்லாத வீண் வம்புகளில் மாட்டிக்கொண்டு பிரச்சனையில் தான் முடியும் என்று ஜகா வாங்கி விட்டார். அதனால் இவருடைய 50வது படத்தை தந்திரமாக குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை லாக் செய்து விட்டார்.

அத்துடன் தற்போது பாலிவுட்டிலும் பிசியாக நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்து வெளிவந்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்காக நல்ல விமர்சனங்களையும் பெற்றார். இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகமும் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. அதில் இவரை வைத்து தான் முழுவதுமாக கதை அமைந்திருக்கிறது.