சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப் ஆன விஜய் சேதுபதி.. நண்பனுக்காக அரங்கேறிய சம்பவம்

Actor Vijay Sethupathi: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் வல்லமை கொண்டவர் விஜய் சேதுபதி. இந்நிலையில் தன் அடுத்த கட்ட படங்களில் பிசியாக இருக்கும் இவர் நண்பனுக்காக ஷூட்டிங்கில் இருந்து எஸ்கேப் ஆன சம்பவத்தை பற்றி இங்கு காண்போம்.

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு நெகட்டிவ் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் விஜய் சேதுபதி, பாலிவுட்டில் ஜவான் படத்தை முடித்துவிட்டு தற்பொழுது தமிழில் கொடுக்கப்பட்ட கால்ஷீட்டை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டது.

இப்படத்தை குரங்கு பொம்மை புகழ் நித்திலன் சாமிநாதன் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் அனுராக் காஷ்யப் இணைந்து நடித்த வருகிறார். படம் கிட்டத்தட்ட முடியும் தருவாய்க்கு வந்துள்ள நிலையில், இன்னும் 2 நாள் ஷூட்டிங் இருப்பதாக கூறப்பட்டது.

அதை தொடர்ந்து டைரக்டர் இடம் நீங்கள் அந்த இரண்டு நாள் எப்போது என்று சொல்லுங்கள் நான் வருகிறேன் என கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம் விஜய் சேதுபதி. இவர் உடனே எஸ்கேப் ஆன காரணம் என்னவென்றால் தன் உயிர் நண்பனான காக்கா முட்டை படத்தின் இயக்குனரான மணிகண்டன் தான்.

நண்பன் மணிகண்டன் மேற்கொள்ளும் புது படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் உயிர் நண்பர்கள் என்பதால், நண்பனின் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க ஆசைப்படுகிறார்.

அதை முன்னிட்டு நடித்துக் கொண்டிருந்த படத்தில் பெர்மிஷன் போட்டு எஸ்கேப் ஆகி இப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மேலும் இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவான படங்கள் தான் கடைசி விவசாயி மற்றும் ஆண்டவன் கட்டளை. அதை தொடர்ந்து தற்பொழுது மகாராஜா படத்தை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.