அடுத்த 4 படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் சேதுபதி.. தலைவா! இது கலையா? கல்லாவா?

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகர்தான் விஜய் சேதுபதி. பொதுவாக காமெடி நடிகர் தான் ஆண்டிற்கு 10 முதல் 20 படங்களை நடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் நடிகர் விஜய் சேதுபதி ஒரே மாதத்தில் மட்டும் மூன்று முதல் நான்கு படங்களை ரிலீஸ் செய்யும் வித்தைக்காரர் ஆக மாறி வருகிறார்.

இந்த மனுசன் தூங்குவாரா இல்லையா? என முன்னணி நடிகர்களும் வாயடைத்துப் போகும் வகையில் இடைவிடாமல் தொடர்ந்து படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்றால், இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்ற கொள்கையை விடுத்து கதாநாயகனாகவும் வில்லனாகவும் மட்டுமல்லாமல் சின்னசின்ன கதாபாத்திரங்களிலும் நடிக்க கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்.

அத்துடன் மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் உருவான ‘லாபம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க விவசாயத்தின் பெருமையை பறைசாற்றுகிறது.

அதைப்போல் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் சன் டிவியில் நேரடியாக மாலை 6.30 மணிக்கு ரிலீசாக உள்ளது. இது மட்டுமில்லாமல் அடுத்த வாரம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படம் வெளியிட ரெடியாக உள்ளதாம்.

இப்படி தொடர்ந்து வரிசையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் படம் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறது. அத்துடன் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியும் தனது அசத்தலான நடிப்பை காட்ட உள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இவர் நடித்து திரையிடப்படுவதற்காகவே நான்கு படங்கள் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

  1. இடம் பொருள் ஏவல்
  2. மாமனிதன்
  3. கடைசி விவசாயி
  4.  யாதும் ஊரே யாவரும் கேளிர்

    vijay-sethupathi-cinemapettai
    vijay-sethupathi-cinemapettai

ஆகிய நான்கு படங்களும் திரையிடுவதற்காக வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. அத்துடன் ரெயின் ஆன் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள மற்றொரு படத்திலும் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.