ஏஸ் முதல் நாள் கலெக்ஷன்.. கல்லா கட்டினாரா விஜய் சேதுபதி?

Vijay Sethupathi : விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று திரையரங்குகளில் ஏஸ் படம் வெளியாகி இருந்தது. ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ருக்மணி நடித்திருந்தார். யோகி பாபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதாவது தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு விஜய் சேதுபதி மலேசியாவுக்கு செல்கிறார். அங்கு யோகி பாபு உடன் நட்பு கிடைக்கிறது. இவர்கள் இருவரின் இடையே ஆன காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

மேலும் விஜய் சேதுபதி ருக்மணி மீது காதலில் விழுகிறார். இதைத்தொடர்ந்து பண தேவைக்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபடும்போது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

விஜய் சேதுபதியின் ஏஸ் முதல் நாள் கலெக்ஷன்

குறிப்பாக விஜய் சேதுபதி சூதாட்டத்தில் இறங்கி பணத்தை இழக்கிறார். மீண்டும் அவருக்கு எப்படி பணம் வந்தது, பிரச்சனைகள் தீர்ந்ததா என்பதே ஏஸ் படத்தின் கதை. என்டர்டைன்மென்ட் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஆனாலும் முதல் நாளில் உலக அளவில் கிட்டத்தட்ட 1.5 கோடி வசூலை பெற்றிருக்கிறது. ஏஸ் படம் விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல ஓபனிங் படமாக தான் அமைந்திருக்கிறது. மேலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்போது திரையரங்குகளில் டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் மாமன் படங்களும் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. கண்டிப்பாக தியேட்டரில் ஹவுஸ்ஃபுல்லாக போவதால் டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தள்ளி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இந்த படங்கள் ஏஸ் படத்தின் வசூலுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.