Actor Vijay Sethupathi: விஜய் சேதுபதி ஒரு காலகட்டத்தில் வந்த எல்லா படங்களையும் மறுக்காமல் நடித்துக் கொண்டிருந்தார். அதனால் வருஷத்திற்கு கிட்டத்தட்ட 7ல் இருந்து 10 படங்கள் வரை வெளியானது. இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு அலுப்பு தட்டியது. ஆகையால் இப்போது நல்ல கதைகள் மற்றும் பெரிய வாய்ப்புகள் ஆகியவற்றை மட்டுமே விஜய் சேதுபதி பயன்படுத்தி வருகிறார்.
இந்த வகையில் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக கத்ரீனா கைப் உடன் இணைந்து மெர்ரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மலையாள திரைப்பட இயக்குனர் விபின் தாஸ் இயக்க இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. இந்நிலையில் விபின் தாஸ் தமிழில் படம் இயக்கினால் சூது கவ்வும் படத்தை போல் இயக்குவேன் என்று கூறினார். இந்த சூழலில் இப்போது தமிழ் சினிமாவில் விபின் தாஸ் என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் கதாநாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் விஜய் சேதுபதி நடித்த நிலையில் அடுத்ததாகவும் அக்கட தேசத்து நடிகையுடன் ஜோடி சேருகிறார். மேலும் கங்கனா ரனாவத் இப்போது லாரன்ஸுக்கு ஜோடியாக சந்திரமுகி 2 படத்தில் நடித்திருக்கிறார்.
விபின் தாஸ் இயக்கும் இந்த படமும் சூது கவ்வும் ஸ்டைலில் தான் எடுக்க இருக்கிறாராம். இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுத்தபின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட இருக்கிறது.