தமிழ் சினிமாவின் சோக காலமாக மாறி வருகிறது 2021. இந்த வருடத்தில் மட்டும் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் கொரானவுக்கு பலியாகி வருகின்றனர். அந்த வகையில் விவேக், கே வி ஆனந்த் மற்றும் சில காமெடி நடிகர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அந்த வகையில் புதுப்பேட்டை, அசுரன் போன்ற படங்களில் கவனிக்கப்படும் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்தான் நித்திஷ் வீரா. பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தார்.
இவரும் விஜய் சேதுபதியும் நெருங்கிய நண்பர்களாம். சமீபத்தில் அவருடைய இழப்பை தாங்க முடியாமல் தனிமையில் இருக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் இரண்டு நாட்கள் வெளியில் சென்று விட்டாராம்.
ஆனால் உண்மையில் அவர் பீல் பண்ணல என்கிறது சினிமா வட்டாரம். விஜய் சேதுபதி தற்போது கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்துவிட்டார். இதில் 20 முதல் 30 படங்கள் டாப் ஹீரோவாக நடித்தது. அப்படிப்பட்ட விஜய் சேதுபதி தன்னுடைய படங்களில் நித்தீஷ் வீராவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
ஆனால் அப்படி செய்யவில்லை. இத்தனைக்கும் அவர் பெரிய அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இப்படி இருக்கும்போது நித்தீஷ் மீராவை கண்டுக்காத விஜய் சேதுபதி தற்போது அவர் இல்லை என்றவுடன் அவர் மீது பாசம் இருப்பதைப்போல நடிக்கிறார் என அசோசியேட் டைரக்டர் ஒருவர் வலைப்பேச்சு நண்பர்களுக்கு கூறியதாக அவர்கள் தங்களது வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
இதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்திருக்கும் விஜய் சேதுபதி இப்படி செய்வதற்கு துளியும் வாய்ப்பில்லை எனவே கூறுகின்றனர்.
